உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

66

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 12

‘இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென

மணிப்புறாத் துறந்த மரஞ்சோர் மாடத்து எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்றிணை

2

கடைச் சங்க காலத்தின் பிறகு இருந்த சோழன் செங்கணான், சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் ஆக எழுபதுக்கு மேற்பட்ட கோயில்களைக் கட்டினான். இதனை.

66

'இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோளீசற்கு எழில்மாடம் எழுபது செய்துலக மாண்ட

திருக்குலத்து வளச் சோழன்

99

என்று செங்கட் சோழனைப்பற்றித் திருமங்கையாழ்வார் கூறுவதிலிருந்து அறியலாம். மேலும்,

66

“பெருக்காறு சடைக்கணிந்த பெம்மான் சேரும் பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றும்

’3

என்று திருநாவுக்கரசர் கூறுவதும் சோழன் செங்கணான் அமைத்த பெருங்கோயில்களையே யாகும். சோழன் செங்கணான் அமைத்த பெருங்கோயில்கள் எழுபத்தெட்டும் செங்கற் கட்டிடங் களே. ஏனென்றால், கற்றளிகள் அதாவது கருங்கற் கட்டிடங்கள் கட்டும் முறை, அக்காலத்தில் ஏற்படவில்லை. செங்கற் கட்டிடங்கள் ஆகையினாலே அவை இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்குமேல் நிலை பெற்றிருக்க இடமில்லை.

66

குகைக் கோயில்கள்"

கி. பி. 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொண்டை நாட்டையும் சோழ நாட்டையும் மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசன் அரசாண்டான். இவன் ஏறக்குறைய கி.பி. 600 முதல் 630 வரையில் ஆட்சி செய்தான். இவன் காலத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் இருந்தார். இவ்வரசன் கோயில் கட்டிட அமைப்பில் புதிய முறையை ஏற்படுத்தினான். பெரிய கற்பாறைகளைக் குடைந்து அழகான "குகைக் கோயில்"களை (பாறைக் கோயில்களை) அமைத்தான். பாறையைச் செதுக்கித் தூண்களையும் முன் மண்டபத் தையும் அதற்குள் கருவறையையும் (கருப்பக் கிருகத்தையும்) அமைக்கும் புத்தம் புதிய முறையை இவன் உண்டாக்கினான்.