உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

197

விட்டிருக்கவேண்டும் என்பதும். அந்த அழிந்துபோன கோயிலிலிருந்து இந்தத் தூணைக் கொண்டுவந்து பிற்காலத்தவர் இந்த மண்டபத்தில் வைத்துக் கட்டியிருக்க வேண்டும் என்பதே.

அன்றியும் சோழநாட்டிலே மயேந்திரப்பள்ளி என்னும் ஊரில் இருந்த சிவன் கோயிலை ஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் தேவாரப்பதிகத்தில் காணப்படுகிறது. மயேந்திரப்பள்ளி என்பது மகேந்திரப்பள்ளி என்பதன் திரிபு. மகேந்திரன் சோழநாட்டிலும் தன் பெயரால் மகேந்திரபள்ளியை உண்டாக்கி அங்குச் சிவ பெருமானுக்கு ஒரு கோயிலை, ஒரு மண்டளியைக் கட்டினான் என்பது இதனால் தெரிகிறது. இந்த மயேந்திரப்பள்ளிக் கோயிலை, இவன் காலத்திற்குப் பிறகு மிக அண்மைக்காலத்தில் இருந்த ஞானசம்பந்தர் பாடியிருக்கிறார். மயேந்திரப்பள்ளி கடற்கரையை யடுத்திருந்த ஊர் என்பது தெரிகிறது. என்னை?

66

"திரை தரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமும் கரைதரு மகிலொடு கனவளை புகுதரும் வரைவிலா லெயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்.

என்றும்,

“கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை கண்டலுங் கைதையும் கமலமார் வாவியும் வண்டுலநம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்.

99

என்றும்,

66

'நித்திலத் தொகைபல நிறைதரு மலரெனச் சித்திரப் புணரி சேர்த்திடத் திகழ்ந்தவன் மைத்திகழ் கண்டன் மயேந்திரப் பள்ளியுள்.

என்றும் ஞானசம்பந்தர் கூறுவது காண்க.

2. மகேந்திரனுக்கு முற்பட்ட கோயில்கள்

மகேந்திரவர்மன் அமைத்த இந்த மகேந்திரபள்ளிக் கோயில் மிக அழகாக இருந்திருக்கவேண்டும். ஏனென்றால், கலைச் செல்வனாகிய மகேந்திரவர்மன் கட்டிய கோயில் அழகாகத்தானே