உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

இது வராகமண்டபத்தைப் போன்ற அமைப்புடையது. பெரிய மண்டபமும், மண்டபத்தின் பின்புறச் சுவரின் மத்தியில் சிறிய மாடம்போன்ற கருவறையும் உடையது. மண்டபத்தை இரண்டு வரிசைத்தூண்கள் தாங்குகின்றன. முன் வரிசையில் உள்ளவை சிங்கத் தூண்கள். பின் வரிசையில் உள்ளவை சாதாரணத் தூண்கள். இக் குகைக் கோயில் மண்டபம் 33 அடி நீளமும் 14 அடி அகலமும் 11 1/2 அடி உயரமும் உள்ளது. ஒரே பாறைக்கல்லைக் குடைந்து அமைக்கப்பட்ட இக் குகைக்கோயில் மேற்குப் புறம் பார்த்திருக்கிறது.

வராக மண்டபம்போன்றே இக் குகைக்கோயிலும் முன்புறம் அடைபடாமல் திறந்த வெளியாக இருந்தது. ஆனால், வைணவர்கள் கைப்பற்றிக் கொண்ட பிற்காலத்தில் (விஜயநகர அரசர் காலத்தில்) இக் கோயிலின் முன்புறத்தைக் கற்களினால் அடைத்து மூடி உள்ளே செல்ல சிறு கதவு ஒன்றை வைத்திருக்கிறார்கள். ஆகையினாலே இப்போது இக் குகைக்கோயிலில் இருள் சூழ்ந்திருக்கிறது.

மண்டபத்தின் பின்புறச்சுவரின் மத்தியில் உள்ள சிறிய கருவறையில் வராகப்பெருமாள் திருவுருவம் சுதை மூர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது. இக் கருவறை, வராக மண்டபத்தின் கருவறையைப் போன்று சற்று முன் வளர்ந்திருக்கிறது. கருவறை தரைமட்டத்திற்கு மேல் இரண்டடி உயரத்தில் இருக்கிறது.

வராகப்பெருமாள் கருவறைக்கு இடது புறத்திலும் வலது புறத்திலும் சுவரில் பெரிய உருவங்களாக கஜலக்குமி, கொற்றவை முதலிய உருவங்கள் சிற்பவுருமாகச் செய்யப்பட்டுள்ளன.

மண்டபத்தின் வடபுறச் சுவரில், மாமல்லனுடைய பாட்டனான சிம்மவிஷ்ணுவின் உருவமும் தென்புறச் சுவரில், மாமல்லனுடைய தந்தையான மகேந்திரவர்மன் உருவமும் புடைப்புச் சிற்பங்களாக

அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சிராப்பள்ளி குகைக்கோயில்

திருச்சிராப்பள்ளி மலையிலே இரண்டு குகைக்கோயில்கள் இருக்கின்றன. அவை மேல் குகைக்கோயில் கீழ்க் குகைக்கோயில் என்பவை. மேல் குகைக்கோயில், மாமல்லன் நரசிம்மவர்மனுடைய தகப்பனான மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. கீழ்க்