உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

323

பெயர் ஏற்பட்டது. இவ்வரசன் வாதாபி நகரத்தை வென்றபோது, இவனுடைய யானைப்படைக்குத் தலைவனாக இருந்தவர் பரஞ் சோதியார் எனப்படும். சிறுத்தொண்ட நாயனார்.

தனக்குரிய இலங்கை அரசாட்சியை இழந்து பகைவருக்கு அஞ்சிக் காஞ்சிபுரத்துக்கு வந்து இவ்வரசனிடம் அடைக்கலம் புகுந்த மானவர்மன் என்னும் இலங்கை மன்னனுக்கு அரசாட்சியை மீட்டுக்கொடுத்தவனும் வாதாபிகொண்ட நரசிம்மவர்மனே.

சைவ சமயத்தையும் பக்தி இயக்கத்தையும் நிலைநாட்டிய திருநாவுக்கரசு சுவாமிகள், திருஞானசம்பந்த சுவாமிகள் முதலிய சைவ அடியார்களும், பாண்டி நாட்டை அரசாட்சிசெய்து சமண சமயத்த வனாக இருந்து பின்னர் சைவசமயத்தைச்சேர்ந்த கூன் பாண்டியன் என்னும் நெடுமாற நாயனாரும் அவன் அரசியாரான மங்கையர்க் கரசியாரும் அமைச்சரான குலச்சிறை நாயனாரும் மற்றும் சில நாயன்மார்களும் வாழ்ந்திருந்த காலமும் மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்திலேதான்.

அதுபோலவே, வைணவ சமயத்தையும் பக்தி இயக்கத்தையும் நிலைநாட்டிய ஆழ்வார்களாகிய திருமழிசை யாழ்வாரும், பேய் பூதம் பொய்கை என்னும் முதலாழ்வார் மூவரும் வாழ்ந்திருந்த காலமும் வாதாபிகொண்ட நரசிம்மவர்மன் காலத்திலேதான்.

பல நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டிலே நிலைபெற்றுச் சிறப்படைந்திருந்த பௌத்த சமயமும் சமண சமயமும், சைவ வைணவர்களின் பக்தி இயக்கத்தினால் தாக்குண்டு, பழைய செல்வாக்கையும் சிறப்பையும் இழக்கத் தொடங்கிய காலமும் நரசிம்மவர்மன் காலத்திலேதான். இவ்வாறு பல முக்கிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்த காலத்திலே அரசாண்ட வாதாபிகொண்ட நரசிம்மவர்ம னுடைய வரலாற்றையும் அக்காலத்து ஏனைய வாலாற்றையும் நம்மவர் அனைவரும் அறியவேண்டும் என்னும் நோக்கத்தோடு இந்நூலை எழுத முற்பட்டேன்.

ஏறக்குறைய கி.பி. 4-ஆம் நூற்றாண்டிலிருந்து 10-ஆம் நூற்றாண்டுவரையில், பல்லவ அரசர்கள் சோழநாட்டையும் தொண்டை நாட்டையும் அரசாண்டார்கள். 10-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, பல்லவருக்குக் ‘கீழடங்கியிருந்த சோழர்கள், மீண்டும்

"