உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

இக்காலத்தில் இந்தப் பாவையைப் பற்றிப் புதிய கதை கற்பனைக் கதை கூறப்படுகிறது. பாண்டியன் மீது போர்செய்யக் களபரன் என்னும் அரசன் வந்தானாம். அச்சமயம் பாண்டியன் இராணி யுடன் கொல்லி மலைமேல் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்திருந்தானாம். அப்போது போர்முரசு கொட்டும் ஓசை கேட்டதாம். கேட்டவுடனே பாண்டியன் அரசியினிடம், 'இங்கேயே இரு; விரைவில் வந்துவிடுகிறேன்' என்று கூறிப் போர் முனைக்குச் சென்றானாம். சென்ற பாண்டியன் திரும்பிவரவில்லை. வருவான் வருவான் என்று அவள் மலைமேல் காத்துக்கொண்டிருக்கிறாளாம். அவள்தான் கொல்லிப் பாவையாம். இது இக்காலத்தில் கூறப்படுகிற கற்பனைக் கதை. பாமரர் பகர்ச்சி.

னால், இந்தக் கற்பனைக் கதையிலும் சரித்திரச் செய்தி யொன்று அமைந்திருக்கிறது. அது என்ன வென்றால், கடைச்சங்க காலத்திற்குப் பிறகு, அதாவது, கி.பி. 250 வருடங்களுக்குப் பின்னர், களபரர் என்றும், களவரர் என்னும் கூறப்படுகிற அரசர், பாண்டி யனுடன் போர் செய்து, பாண்டிய நாட்டைப் பிடித்துக்கொண்டு, அந்நாட்டை அரசாண்டனர் என்பது. இச்செய்தியைச் சின்னமனூர்ச் செப்புப் பட்டயம் கூறுகிறது. கொல்லிப் பாவையைப் பற்றிய கதையிலும் பாண்டியன் கௗபரனுடன் போர்செய்யச் சென்றான் என்னும் செய்தி கூறப்படுகிறது. கொல்லிப் பாவைக் கதை கற்பனையாக இருந்தும் அதில் சரித்திரச் செய்தி புகுத்தப்பட்டிருப்பது கருதத்தக்கது.

சங்க காலத்துக்குப் பின்னர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டிலிருந்த திருமங்கையாழ்வார் தாம்பாடிய பெரிய திருமொழியில் கொல்லிப் பாவையைக் குறிப்பிடுகிறார். தலைமகளின் அழகை அவர் கொல்லிப் பாவையின் அழகுக்கு உவமை கூறுகிறார். "குவளையங் கண்ணி கொல்லியம் பாவை" என்றும், "குலங்கெழு கொல்லி கோமளவல்லி” என்றும் அவர் கூறுகிறார். இதற்கு வியாக்கியானம் (உரை) கூறின உரையாசிரியர்கள், இதில் சுட்டப்படுகிற கொல்லிப் பாவையை இவ்வாறு விளங்கக் கூறுகிறார்கள். 'கொல்லி மலை மேலே ஒரு பாவையுண்டு. எல்லாரும் உரு வகுப்புக்குத் தமிழர் சொல்லுவதென்று’ இந்த வியாக்கியானத்துக்குக் குறிப்புரை எழுதியவர், “பாவையுண்டு என்றது ஸ்திரி பிரதிமை எழுதியிருக்கும்" என்றபடி என்று தெளிவு படுத்துகிறார்.

வியாக்கியானம் எழுதினவர் இன்னொரு இடத்தில் இவ்வாறு கூறுகிறார். "கொல்லி மலையிலே ஒரு பாவையுண்டு; வகுப் பழகிதாயிருப்பது; அதுபோலேயாயிற்று இவளுக்குண்டான ஏற்றமும் பிறப்பும்".