உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் ஓவியம் – அணிகலன்கள்

157

பெண் ஒருத்தி என்னென்ன நகைகளை அணிந்தாள் என்பதைக் கீழ்க்கண்ட செய்யுள்கள் கூறுகின்றன. இந்தச் செய்யுள்களை அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர், சிலப்பதிகாரம், கடலாடு காதை உரையில் மேற்கோள் காட்டியிருக்கிறார். இச்செய்யுள்கள் எந்த நூலைச் சேர்ந்தவை என்பது தெரியவில்லை.

அவ்வாய் மகரத் தணிகிளர் மோதிரம் பைவாய் பசும்பொற் பரியக நூபுரம்

மொய்ம்மணி நாவின் முல்லையங் கிண்கிணி

கௌவிய வேனவும் காலுக் கணிந்தாள்.

குறங்கு செறியொடு கொய்யலங் கார நிறங்கிளர் பூந்துகில் நீர்மையி னுடீஇப் பிறங்கிய முத்தரை முப்பத் திருகாழ் அறிந்த தமைவர வல்குற் கணிந்தாள். ஆய்மணி கட்டி யமைந்தவிலைச் செய்கைக் காமர் கண்டிகைத் கண்டிரண் முத்திடைக் காமர்பொற் பாசங் கொளுத்திக் கவின்பெற வேய்மருள் மென்றோள் விளங்க வணிந்தாள்.

புரைதபு சித்திரப் பொன்வளை போக்கில் எரியவிர் பொன்பணி யெல்லென் கடகம் பரியகம் வாள்வளை பாத்தில் பவழம் அரிமயிர் முன்கைக் கமைய வணிந்தாள்.

சங்கிலி நுண்டொடர் பூண்ஞாண் புனைவினைத் தொங்க லருத்தித் திருந்துங் கயிலணி

தண்கடல் முத்தின் தகையொரு காழெனக்

கண்ட பிறவுங் கழுத்துக் கணிந்தாள்.

நூலவ ராய்ந்து நுவலரும் கைவினைக் கோலங் குயின்ற குணஞ்செய் கடிப்பிணை மேலவ ராயினும் மெச்சும் விறலொடு காலமை காதிற் கவின்பெறப் பெய்தாள்.