உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

23. வெப்பமுற்றோன் அவிநயம்

66

“வெப்பி னவிநயம் விரிக்குங் காலைத் தப்பில் கடைப்பிடித் தன்மையும் தாகமும் எரியின் அன்ன வெம்மையோ டியைவும் வெருவரும் இயக்கமும் வெம்பிய விழியும் நீருண் வேட்கையும் நிரம்பா வலியும் ஒருங்காலை யுணர்ந்தனர் கொளலே.

24. நஞ்சுண்டோன் அவிநயம்

"கொஞ்சிய மொழியில் கூரெயிறு மடித்தலும் பஞ்சியின் வாயில் பனிநுரை கூம்பலும் தஞ்ச மாந்தர் தம்முகம் நோக்கியோர் இன்சொல் இயம்புவான் போலியம் பாமையும் நஞ்சுண் டோன்தன் அவிநயம் என்ப.

"சொல்லிய வன்றியும் வருவன உளவெனில் புல்லுவழிச் சேர்த்திப் பொருந்துவழிப் புணர்ப்ப

வரிக்கூத்து

வரிக்கூத்து என்பது கூத்து அல்லது நடனத்தில் சேர்ந்தன்று; இது நாடகத்தில் நடிக்கப்படுவது. “வரியாவது. அவரவர் பிறந்த நிலத் தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழிற்றன்மையும் தோன்ற நடித்தல், என்னை?

'வரியெனப் படுவது வகுக்குங் காலைப்

பிறந்த நிலனுஞ் சிறந்த தொழிலும்

அறியக் கூறி யாற்றுழி வழங்கல்’

என்றாராகலின்” என்று அடியார்க்கு நல்லார் எழுதுகிறார்.1

13

வரிக்கூத்து எட்டு வகைப்படும். அவை. 1. கண்கூடுவரி. 2. காண்வரி. 3. உள்வரி. 4. புறவரி. 5. கிளர்வரி. 6. தேர்ச்சிவரி. 7. காட்சிவரி. 8. எடுத்துக் கோள்வரி என்பன.

“கண்கூட்டு காண்வரி யுள்வரி புறவரி கிளர்வரி யைந்தோ டொன்ற வுரைப்பிற் காட்சி தேர்ச்சி யெடுத்துக் கோளென மாட்சியின் வரூஉமெண்வகை நெறித்தே.”