உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

கின்றன. அவை, எழுத்துக்களைச் செதுக்கிய சிற்பிகளின் அறியாமை யினால் நேர்ந்த பிழைகளாகும். அப்படிப்பட்ட செய்யுள்களை உள்ளது உள்ளபடியே அமைத்து எழுதியுள்ளேன்.

சாசனத்தில் உள்ள செய்யுள்களை அடிபிரித்து அமைத்ததும், எகர ஒகர மெய்யெழுத்துக்களை ஆராய்ந்து தக்கவாறு சொற்களை அமைத்ததும் தவிர ஏனைய திருத்தங்கள் எதையும் நான் செய்ய வில்லை. செய்யுள்களில் எழுத்துக்கள் தவறாக இருந்தாலும், அதிக மாகவோ குறைவாகவோ இருந்தாலும், அவற்றை உள்ளது உள்ள வாறே எழுதியுள்ளேன். இந்த வகையில் குறைபாடு காணப்பட்டாலும் அவை தவிர்க்க முடியாதவை என்பதை வாசகர் அறிய வேண்டும்.

சாசனச் செய்யுள்களை மட்டும் அச்சிடுவதால் பயனில்லை. அவற்றிற்கு விளக்கங்களும் குறிப்புகளும் எழுதினால் பெரிதும் பயன்படும் என்றறிந்து, ஒவ்வொரு செய்யுளுக்கும் விளக்கமும் குறிப்பும் எழுதியுள்ளேன். மேலும் அவை உள்ள, அல்லது கிடைத்த இடங்களையும், அவை அச்சிடப்பட்டுள்ள வெளியீடுகளின் பெயர் களையும் காட்டியுள்ளேன். கால வரையறைப்படி செய்யுட்களைத் தொகுப்பதில் குறைகள் உள்ளபடியால் அப்படித் தொகுக்காமல். மாவட்ட முறையாகச் செய்யுள்களைத் தொகுத்துள்ளேன்.

தென் இந்திய சாசனங்கள், இந்திய சாசனங்கள், புதுக்கோட்டை சாசனங்கள், திருவாங்கூர் சாசனங்கள், கர்னாடக சாசனங்கள் ஆகிய சாசன வெளியீடுகளில் உள்ள சாசனச் செய்யுட்களைத் தொகுத் துள்ளேன். செந்தமிழ்ப் பத்திரிகையில் வெளிவந்துள்ள சில சாசனச் செய்யுள்களையும் இதனுடன் தொகுத்துள்ளேன். இது வரையில் வெளிவராத புதிய சாசனச் செய்யுள் ஒன்றையும் இதனுடன் பிற்சேர்க்கையாகச் சேர்த்துள்ளேன். இந்தப் புதிய சாசனச் செய்யுளை இதில் அச்சிடக் கொடுத்துதவியவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத் தமிழ் ஆராய்ச்சித்துறை விரிவுரையாளரும், சாசன ஆராய்ச்சியிலும் சரித்திர ஆராய்ச்சியிலும் வல்லவருமான உயர் திரு. T.V. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள். அப்பெரியாருக்கு மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழிலே சாசனச் செய்யுட்கள் இவ்வளவுதான் என்று நினைக்க வேண்டா. இன்னும் நூற்றுக்கு மேற்பட்ட செய்யுள்கள் உள்ளன. அவை அச்சிடப்படாமல் எபிகிராபி இலாகாவில், வைக்கப்பட்டு,