உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

110

115

குளிர்புனற் காடவ குமாரன் தடாகமுங் குன்று கரையன்ன கோடுயர் நெடுங்கரை வென்று மலைகொண்ட பெருமா ளேரியுஞ் சுரர்தரு நெருங்கிய சோலையு மொவ்வாப் பரதம் வல்ல பெருமாள் தோப்பும் வளஞிமி றார்க்கு மடலிளம் பாளை விரைகமழ் வீர ராயன் தோப்புந் தவநெறிச் சுந்தரர் தம்பெருங் குலத்திற் த . . . . ற்குச் செய்து குடுத்த

கடலென நிறைந்து கார்வயல் விளைக்கும் 120 விச் . . சை நிச்சங்க மல்ல னேரியுங்

காங்கயன் தடாகமுங் காங்கயன் மடமும் பூங்கமழ் சோலையும் பொற்புடன் விளங்க யில்வகை யாவையுஞ் செய்தன னதனாற் பாவை பாகன் சேவடித் தாமரை

125 யணிந்த சென்னியர் பார்க்குங் கண்ணின ரணிந்த நீற்றின ராகம நன்நெறி

படிந்த நெஞ்சினார் பரசமையங் கடனை கடிந்த வாணையர் கண்ணுதற் பெருமா னாதி நாத நாய்வேடங் கொண்டு

130 பாய்புனற் கங்கை யாயிர முகங்கொண்ட டார்த்தெழு மன்னா ளேற்றுக் கொண்ட திருந்திய பிறைமுடி யருந்தவச் சடாதர ராதியி லஞ்செழுந் தோதிய தொண்டரென் றெண்ணிய நாற்பத் தெண்ணா யிரவருந் 135 திருவரு ளிவன்மேல் வைத்தன

ரிருநிலந் தன்னி லினிதுவாழ் கெனவே.

41

குறிப்பு :- 51 - ஆம் வரியில், “நல்லிசைக் கடாம்புனை நன்னன் என்று கூறப்பட்டுள்ளது. இதில், நல்லிசைக்கடாம் என்பது சங்க காலத்து இலக்யிமாகிய பத்துப்பாட்டில் மலைபடுகடாம் என்னும் பாட்டாகும். மலைபடுகடாம் பாடியவர், இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்பவர். இப்பாடலைப் பெற்றவன் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன்சேய் நன்னன் என்னும் சிற்றரசன்.