உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

கூராழி யேத்திய பல்லவற்குக் கூடல் மன்னவற்குப் பாராழி சூழ்ந்திசை பரிக்குப் பந்தி பண்டடைந்த நீராழி வேழங்க ணீராடு மாமடு நின்றகொற்றப் போராழி வெற்பிவன் செங்கோல் நடக்கும் பெருவழியே.

தொழுதிய லாமன்னர் தொண்டைத் திருநாடு கொண்டவரூர் கழுதிய லக்கண்ட காடவன் பல்லவன் காசினிமேற் பழுதிய லாத்தனிச் செங்கோல் நடாத்திப் பராக்ரமஞ்சென் றெழுதிய தூணங்க ளெண்டிசை சூழ்ந்த வெழுகிரியே. கைம்மலை வெள்ளக் கடற்படைப் பல்லவன் காடவர்தஞ் செம்மலை வந்து பணியா வடமன்னர் சேனைவிட்டுத் தம்மலைவிட்டுப் புறமலை வேலித் தலத்துளஞ்சா தெம்மலை யெச்சுரத்துப் புகுவார் புக்கிருப்பதற்கே. வண்டற் புனற்பெண்ணை நாடுடையான் வடவேங் கடவெற்பன் தொண்டைத் திருநாடு தோள்வலியாற்

கொண்ட தொண்டைமன்னன்

கண்டற் கடற்கச்சிப் பல்லவன்

காடவன் காரிருளிற்

பண்டைப் பிரமவர்க் கன்பிலாப்

பொற்பதாம் புயனே.

43

3

4

50

6

குறிப்பு:- இச்செய்யுட்களில் மூன்றாவதான “கூராழியேந்திய' என்னும் செய்யுள், வட ஆர்க்காடு மாவட்டம், குடியாத்தம் தாலுகா, ரங்கம்பேட்டைக்கு அருகில் உள்ள மோரி ஜொனை என்னும் இடத்தில் ஒரு பாறைமேல் எழுதப்பட்டுள்ளது (தென் இந்திய சாசனங்கள், தொகுதி பன்னிரண்டு, 127-ஆம் எண் சாசனம்). அந்தச் சாசனச் செய்யுளின் மேலே சிதைந்துபோன சாசன வாசகம் எழுதப் பட்டிருக்கிறது. அதன் வாசகம் இது: “கூடல் ஆளப்பிறந்தார் மகனார் தொண்டை மண்டலங் கொண்ட பல்லவாண்டாரான வீரர் வீரன் காடவராயர்

و,