உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

40 வாடா வாகைக் காடவ குமாரன்

45

வான்புகழ் மல்லையு மயிலையுங் காஞ்சியுந் தண்டக நாடுந் தண்புனற் பாலியும்

பெண்ணையுங் கோவலும் மெவுகையு முடையவ னெண்ணருஞ் சிறப்பில் யாவரு மதித்த விருதரில் வீரன் விறல்வீ ராசனி

கரிய நாதன் காதற் குமரன்

குடதிசைக் கருநடர் தென்புலங் குறுகவும் வடதிசைத் தெலுங்கர் வடக்கிருந் தழியவும் போர்பல கடந்து பொருந்தா மன்னவ 50 ராரெயிற் சேர்ந்தூர் மலையர ணழித்து நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பில் வெல்புக ழனைத்து மேம்படத் தங்கோன் வாகையுங் குரங்கும் விசையமுந் தீட்டிய வடல்புனை நெடுவே லாட்கொண்ட தேவன் 55 கடகரி முனைமுகங் கடந்த காங்கயன் கண்ணா ரமுதர் கனங்குழை யாகத் தண்ணா மலையற் கன்புகெழு நெஞ்சில் விருப்புடன் செய்த திருப்பணிக் கோவை யாவையு மெடுத்துப் பாவல ருரைப்பில் 60 நின்ற தொல்புகழ் நிலமுழு தளித்த

65

70

வென்றி புனைதோ ளாட்கொண்ட தேவன் வேணா வுடையா னென்னும் பெயரா னீணாள் வாழ நிலைபெறச் செய்த பெருமா ளமருந் திருமண் டபமும் மருக்கமழ் கனகத் திருப்பளி யறையுந் திருவமு தேற்றும் பெருமண் டபமும் விரிவுடன் செய்திருக் காக்கள்ளியும் பெருவிற லவனி யாளப் பிறந்தான் திருமண்டபமுஞ் செழுமலர் தொடுத்த கண்ணி வாடாது கண்ணிமை யாது மண்மிசை நடவா வானோர் வலம்வர வெண்மதி நிலவில் விளங்குசுட ரெரிக்கும் படித்தள மென்னவும் படிமூன் றுக்கு மடித்தள மென்னவு மடையா மன்னவர்

39