உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

/ 83

இது இவர் மகனார் நாலுதிக்கும் வென்றாரான ஏழிசை மோகன் காடவராயர் கவி.

துடக்கு மாரன் சொரிசரப் பாயல்மேற் கிடக்கு மிவ்வுல கென்பதுங் கேட்டுமே

வடக்கு மேருவுந் தெற்கு மலையமுங்

கடக்கு மாணையான் கச்சிய ராயனே.

மும்மலை முன்பெறிந்தாய் பின்பு முரணிரட்டர் தெம்மலை வாதாபி சென்றிருந்தாய் - மெய்யம்மைச் செருவரசே பின்னிச் சிலம்பா வெறிந்த

தெருவரைசே மேனா ளுடன்று.

4

50

இது இவர் தம்பியார் அரசநாராயணன் கச்சியராயரான காடவராயர் கவி.

இவர் மகன் சகரையாண்டு ஆயிரத்தொரு நூற்றெட்டினால் ஆடி மாசத்துப் பிற்பத்தில் கண்டராதித்தன் வாசலுக்கு மேற்கே புறப்பட்டுக் கற்கடக மாராயன் கூடலும் அதியமானாடும் அழித்து வெற்றிக்கொடி உயர்த்த அனுமனும் பொறித்தான் ஆளப்பிறந்தான் வீரசேகரனான காடவராயன்.

பாரள வல்ல பணைத்தோ ளளவு பகலவன்போந் தேரள வல்லநின் செங்கோ லளவு திகிரிச் செங்கை காரள வல்ல பரவீர சேகர காடவநின்

போரள வெவ்வள வாம்பர வேந்தர் புறத்தளவே.

6

தாரார் மணிப்புயந் தண்ணந் துழாய்மண நாறுஞ்சந்தக் காரார் திருநிறஞ் செய்யாள் திருமண நாறுங்கச்சி யாரார் திகிரிக்கை யாளப் பிறந்தாற் கசஞ்சலற்குப் பாராள் வடமன்னர் பொன்முடி நாறும் பதாம்புயமே.

7

விடையள விட்ட கொடிவீர சேகர காடவநின்

நடையள விட்டது ஞாலங்க ளேழையும் வாழிநின்போர்ப் படையள விட்டது பத்துத் திசையும்பரியமுத்தக் குடையள விட்ட திரிசுடர் சூழண்ட கூடத்தையே.

8

ஸ்வஸ்திஸ்ரீ. இக் கல்வெட் டழிப்பான் வல்லவரையன் சத்தியம்.