உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

கள்ளும் முருகுந் தருமலரான் மிக்க சந்திறைஞ்சி யுள்ளும் புறமும் மொருக்க வல்லார்கட் குலகறியக் கொள்ளும் மடிமை கொடுக்குந் துறக்கம் பிறப்பறுக்குந் தெள்ளும் மருவிச் சிராமலை மேய சிவக்கொழுந்தே. கொழுந்தார் துழாய்முடிக் கொற்ற கருடக் கொடித்தேவுஞ் செழுந் தாமரையிற் றிசைமுகத் தாதியுஞ் சேவடிக்கீழ்த் தொழுந் தாரியர்தந் துணிவைப் பணியச் சுடர்ப்பிழம்பா யெழுந்தான் சிராமலைக் கேறநம் பாவம் மிழிந்தனவே. இழியும் நரகமு மேறுந் துறக்கமு மிவ்விரண்டும் பழியும் புகழுந் தரவந்தன வினைப் பற்றறுத்துக் கழியும் முடம்பு கழிற்தவர் காணுங் கழலன்கண்டீர்

47

48

பொழியுங் கருமுகில் போர்க்குந் திருமலைப் புண்ணியனேய். 49 புண்ணியன் வேதம் முதல்வன் புரமூன் றெரித்தவன்று திண்ணியன் றேவர் பிரானென்ன நின்றான் சிராமலைவாய்க் கண்ணியன் றண்ணந் தழையன் கனைபொற் கழலனம்பாற் றண்ணியன் இன்றும்வரும் மன்று போன தனிவில்லியே.

வில்லியன் பின்செல்ல முன்செல்லா விரிவையு மென்கிளிப்போல் சொல்லிபின் செல்லமுன் செல்லா விடலையுட் சொல்லிமான்

வல்லிபின் செல்லமுன் செல்லா

திடங்கொண்ட மாதவர்போ

லெல்லிபின் செல்லமுன் செல்லார்

சிராப்பள்ளி யெய்துவரேய்.

எய்துவ ராயமுந் தாமும் இரும்பொழி லென்னைமையல் செய்தவர் வாழ்வுஞ் சிராமலை யென்பது சென்றுகண்டால் மெய்தவர் மான்விழி மென்முலை தண்ணிய வம்முலைக்கீ ழைதவர் நுண்ணிடை யல்கிலுஞ் சால வளவுடைத்தேய். உடைத்தேய் வருதுன்ப வெம்பகை நீக்கி உலகளிக்குஞ் சடைத்தேவர் முடித் தேவருந் தாடொழத் தானவரைப் புடைத்தேய் கெடுத்த பரமன் சிராமலைப் பாடிருந்துங்

50

51

52

கடைத் தேவனைத் தொழுமோ வினையேனென் கரதலமேய். 53