உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

பெரியான்

டம் : மைசூர், கோலார் தாலுகா, விபூதிபுரத்திலுள்ள ஜலகண்டேசுவரர் கோவிலில் உள்ள சாசன கவி.

பதிப்பு : கர்நாடக சாசனங்கள், பத்தாந் தொகுதி: கிரந்த தமிழ் சாசனங்கள் கோலார் தாலுகா, எண் 131. (Eipigraphia carnatica Vol. X. Part II. Kolar Taluk. No. 131.)

விளக்கம் : குவளாலபுரத்து (கோலார்) ஏரியின் கீழ் உள்ள நிலங்களைத் தானம் செய்த பெரியான் என்பவரைப் புகழ்கிறது இச் செய்யுள். இந்தத் தானம், சகரை யாண்டு 1120-இல் (கி.பி. 1198-இல்). விக்கிரம கங்கன் என்னும் அரசன் காலத்தில் செய்யப்பட்டது.

5

10

சாசனச் செய்யுள்

அலைகடல் உடுத்த மலர்தலை யுலகத் தெண்ணருங் கீர்த்தி இசையா ரதிபன் அண்ணலெங்குந்தை யமான் காதலன் கோதில் .. . . நகரங்

குடியேற்றிய ஆதிவணி கேசன்

அளகைப் பதியுந் தானுடை யோன். . . . திரைலோக்ய பட்டண ஸ்வாமி ஐய்யனருட்

சீராசைத் தேவ னுடனவ தரித்த

ஆயிழை யாளுய்ய . . ண்டை

அருந்ததியே யனையாள் தந்தாய்

திருவயிற் றுதித்த துளங்குமணித் திருமார்பன்

செங்கமலப் புனல் புடைசூழ் செழுந்

தொண்டை வளநாடன் எங்கள் பெரியாற் கிளைய பெரியான் மற்றீண் டுலகில்

15 ஒப்பரிய சகரையாண் டோரா யிரத்துமேற் செப்பரிய நூறு கடந் திருபதுதான்

சென்றதற்பின் வென்றிபுனை கடாக் களிற்று விக்கிரம கங்கன் குன்றெறிந்த கூரிலைவேற்

கொற்றவனை யிடுவித்துக் கொத்தலரும் பூம்புனல்சூழ்