உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

205

39. உலகத்தில் புகழ்பெற்ற கொட்டையூரில் உள்ள நல்லொழுக்க முடைய குற்றமற்ற வசிஷ்ட குலத்தில் பிறந்த அறிஞர்களைப் பின்பற்றுகிற அனந்தநாராயணன் என்னும் பிராமணன் இந்த பிராஸ்தியைப் பாடினான்.

40-42. நீதியோடு அரசாண்ட பகையரசர்களை வென்று ஆற்றல் வாய்ந்த அரசனுடைய உத்தியோகஸ்தனான, காஞ்சி வாயில் என்னும் ஊரில் பிறந்தவன் இராஜராஜ மூவேந்தவேளான் என்னும் பெயர் படைத்த தில்லையாளி என்பவன், அரசன் ஆணைப்படி இந்தச் சாசனத்தை நன்றாக எழுதினான்.

43-44. கடாக தேசத்து அரசன் ஆணைப்படி ஸ்ரீமான் அடிகள் மகனான அடக்கமும் அறிவும் உள்ள துவவூரவான் அணுக்கன் என்பவன் இந்தச் சாசனத்தை எழுதச் செய்தான்.

45-48. ஹோவ்ய மரபின் திலகம் போன்று, காஞ்சிபுரத்திலே பிறந்து எழுதுவதில் சித்திரகுப்தனுடன் போட்டியிடுகிறவர்களான மிக்க அறிவு வாய்ந்து கிருஷ்ணனுக்குப் பிறந்தும் கிருஷ்ண (கரிய) ஒழுக்கம் இல்லாத ராஜராஜ மகாசார்யன் என்னும் வாசுதேவனும் கிருஷ்ணனுடைய இரண்டு மக்களான கிருஷ்ணனுடைய திருவடித் தாமரையை மொய்க்கின்ற வண்டுகள் போன்ற ஸ்ரீரங்கனும் தாமோதரனும், வாசுதேவனின் மகனான தாமரைப் போன்ற கண்களை யுடைய கிருஷ்ணனும், ஆராவமுதன் மகனான பேச்சு வன்மையுள்ள புருஷோத்தமனும் ஆகிய இவ்வைவரும் இந்தச் செப்பேட்டை எழுதினார்கள்.

108. “இச் சாசனம் வெட்டினோம் ஐயங்கொண்டசோ

109. ழமண்டலத்து ஸ்ரீகாஞ்சீபுரத்து ஓவியச் சித்திரகாரிய கிருஷ்ணன் வாசுதேவனான ராஜராஜப்பே

110. ராசார்யனேனும் கிருஷ்ணன் திருவரங்கனும் கிருஷ்ணன் தாமோதரனும் வாசு தேவன் கிருஷ்ணனும்

111. ஆராவமிர்து புருஷோத்தமன்னும்.”