இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிறுவர் பாடல் திரட்டு
3ஆம் பாடம் புகைவண்டி
73
போகுது புகைவண்டி - இந்தப்
பூதலத்தில் உள்ளவர்க்குச் சுகவண்டி
(போகுது)
1.
முன்னே ஓரி யந்திரம்தான்
முடுகிப்
பின்னேயுள்ள வண்டிகளைப் பின்னி இழுத்து (போகுது)
2. கம்பீரமாய் இரண்டு - இரும்புக்
கம்பிகள்மேல் தங்கலின்றி விரைவாக
(போகுது)
3.
சன்னலின் வழிக்காணும் - காட்சியை
நன்னயமாய்க் கண்டுசனம் நகைத்திருக்க
(போகுது)
4. புகைளைப் புரைவழியாய்ப் – புதிய
வகைவகையாய் வெளியே வரவிட்டு
(போகுது)
5. இனியதோர் குழல்ஊதும் – இதற்கு
இனியும் உலகில்நிகர் ஏதும் வருமோ?
(போகுது)
6. மடமட வென்றிரைந்து – முழங்கிக் கடகட வென்று காற்றாய்ப் பறந்தோடி
(போகுது)
1.
கடைசியில் கார்டு இருந்து - பச்சைக் கொடியை வெளியில் காட்டத் திடமாக
(போகுது)
8. சாமியின் கருணையினால் - தன்னை
ஜேம்ஸ் வாட்ட ஜார்ஜ் ஸ்டீபன் செய்ததைச் சொல்லி
(போகுது)