பக்கம்:இருட்டு ராஜா.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144இருட்டு ராஜா

 பார்க்க வந்தீரா?இந்தப் புள்ளையையும் ஒரு சிலையின்னு, எண்ணி மீட்டு வந்தீரா”

அவள் பேச்சு தோரணை மட்டுமல்ல, அவளது குரலே மாறிப் போயிருந்தது. முத்துமாலைக்கு அப்படித் தான், தோன்றியது.

அவன் பதில் சொல்ல வாய் திறப்பதற்குள், அவள் ஆவேசம் வந்தவள் போல் கத்தினாள்.

“போடா இங்கேருந்து. போ. உடனே போயிடு. என் வாழ்க்கையிலே மண்ணை அள்ளிப் போட்ட சண்டாளா. நான் புருசனோட வாழுறதை சகிக்காத பொறாமைக்காரா, இங்கே ஏன் வந்தே? இன்னும் ஏன் நிக்கிறே. போறையா, உன்னைக் கடிச்சுக் குதறி உன் ரத்தத்தை நான் குடிக்கவா?”

கூப்பாடு போட்டாள் திரிபுரம். தொடர்ந்து வீல் என்று கீச்சிட்டலறினாள். மயங்கித் தடாலென்று கீழே விழுந்தாள்.

முத்துமாலை திகைத்துப் போய் நின்றான்.

இதற்குள் தெருவில் போனவர்களும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் வந்து கூடியிருந்தார்கள். திரிபுரத்தின் அம்மா வீட்டினுள்ளிருந்து வெளியே வந்து, மகள் பக்கத்தில் உட்கார்ந்து, ஒரு விசிறியால் வீசினாள்.

“பேய் புடிச்சிருக்கு அதுதான் இப்படி பைத்தியம் முற்றிப் போச்சு” என்று அவரவர் மனம் போனபடி பேசினார்கள் , மற்றவர்கள். பல்வேறு யோசனைகள் கூறினார்கள்.

“நீ இங்கே எங்கே வந்தே, முத்துமாலை?” என்று விசாரித்தார்கள்.

தான் வந்த காரணத்தை அவன் சொன்னான்.

“பாவம் திரிபுரம்!” என்று அனுதாபப்படத்தான் முடிந்தது அவர்களால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/146&oldid=1140259" இலிருந்து மீள்விக்கப்பட்டது