உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

(இரண்டாம் பதிப்பு)

இச் சிறு நூலைப் பெரிதும் மதித்து, நல்லுரை எழுதிய பெரியார் பலர்க்கும், நன்கொடை உதவிய சென்னைப் பாடசாலைப் புத்தக இலக்கிய சங்கத்தார்க்கும், 1940 ஆம் ஆண்டின் இண்டெர்மீடியெட் பரீட்சைக்குப் பாடமாக விதித்தருளிய பல்கலைக்கழகப் பெரியோர்க்கும் பெரிதும் வந்தனம் கூறுகின்றேன்.

மயிலாப்பூர்,

சென்னை, 10-7-38.

மயிலை சீனி. வேங்கடசாமி

முன்னுரை

(மூன்றாம் பதிப்பு)

இரண்டாம் பதிப்பு வெளிவந்து பத்து ஆண்டுகளாய் விட்டன. இப்போது இந்நூல் மூன்றாம் பதிப்பாக வெளிவருகிறது. முற்பதிப்பு களில், ஆங்காங்கு இருந்த சில சொற்களை நீக்கி அவற்றிற்குப் பதிலாகத் தூய தமிழ்ச் சொற்களைச் சேர்ந்திருப்பதும், இரண்டொரு இடங்களில் புதிதாகச் சில செய்திகளைச் சேர்த்திருப்பதும், தவிர, அதிகமாக வேறு கருத்துக்களை இதில் சேர்க்கவில்லை. திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார், இப்பதிப்பைச் செம்மைபெற நல்ல முறையில் அச்சிட்டு வெளிப்படுத்தியதற்காக அவர்களுக்கு எனது வந்தனம் உரியதாகும்.

மயிலாப்பூர்,

சென்னை, நவம்பர், 48.

மயிலை சீனி. வேங்கடசாமி