உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -17

ஐரோப்பியர் இந்து தேசம் செல்ல நினைத்தது, முடவன் தேனுக்கு ஆசைப்பட்டதுபோல் இருந்தது.

ம்

இவ்வாறிருந்து வருகையில், பூகோள நூலைப்பற்றி ஆராய்ந்து வந்த அறிவாளிகள் பூமி அப்பளம்போல் தட்டையாக இருக்க வில்லை என்றும், பந்துபோல் உருண்டை வடிவாக இருக்கிறது என்றும் அறிந்தார்கள். ஆனால், இப்பூகோளநூல் உண்மையை மக்கள் ஒப்புக்கொள்வதற்கு நெடுநாள் சென்றது. கடைசியாக, போர்ச்சுகல் தேசத்தவராகிய கொலம்பஸ் என்பவர், இப் பூகோள நூல் உண்மையை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா தேசத்திற்குச் செல்ல வேறொரு வழியைக் கண்டுபிடிக்கத் துணிந்தார். எப்படி என்றால், பூமி உருண்டையாயிருப்பதால், ஒருவன் ஓரிடத்திலிருந்து புறப்பட்டு மேற்கு முகமாகப் பிரயாணம் செய்துகொண்டே போனால், கடைசியில் அவன் கிழக்குப் பக்கமாகத் தான் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்வான் என்னும் பூகோள நூல் உண்மையை மனத்திற்கொண்டு, இந்தியா தேசம் ஐரோப்பாவுக்குக் கிழக்கில் இருக்கிறபடியால், ஐரோப்பா விலிருந்து மேற்குப் பக்கமாய்ப் பிரயாணம் செய்து கொண்டு போனால், இந்தியா போய்ச் சேரலாம் என்று கொலம்பஸ் என்பவர் நம்பினார். ஆனால், அவர் சொல்லிய கருத்தை ஒருவரும் ஆதரிக்கவில்லை. கடைசியாக, மிகுந்த சிபாரிசின் மேல், ஸ்பெய்ன் தேசத்து அரசன் கொலம்பஸுக்கு உதவி செய்ய இசைந்து, சில கப்பல்களையும், மாலுமிகளையும் பிரயாணத்துக்கு வேண்டிய சாமான்களையும் கொடுத்துதவினான். கொலம்பஸ் ஸ்பெய்ன் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மேற்குப் பக்கமாய்க் கடலிற் பிரயாணம் செய்து கொண்டு போனார். சில நாட்கள் பிரயாணம் செய்த பிறகு, கொலம்பஸ் மேற்கிந்திய தீவுகளையும் புதிய உலகம் என்னும் அமெரிக்காக் கண்டத்தையும் கண்டுபிடித்தார். ஆனால், கொலம்பஸ் அத் தீவுகள் இந்தியா தேசத்தைச் சேர்ந்தவை என்றும், அக் கண்டம் இந்தியா தேசம் என்றும் தவறாக நினைத்தார். அவர் தாம் கண்டுபிடித்த பூபாகம் இந்தியா தேசம்தான் என்கிற நம்பிக்கையுடன் இறந்தார். ஆனால், உண்மையில் அது இந்தியா தேசம் அன்று. “ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டொன்றாகும்” என்றபடி, கொலம்பஸ் இந்தியா தேசத்தைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு செல்ல, தற்செயலாகப் புதிய பூபாகங்களைக் காணப் பெற்றார். கொலம்பஸ் புதிய உலகத்தைக் கண்டு பிடித்த செய்தி ஐரோப்பியர்களுக்குப் புதிய

"