உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

37

பெண்களை மணஞ்செய்துகொள்ளும்படி கட்டாயப் படுத்தப்பட்டனர். இவ்விதக் கலப்புமணத்தினாற் பிறந்த பிள்ளைகள் “துப்பாசி” என்னும் பெயருடைய புதிய குலத்தாரானார்கள். இந்தத் துப்பாசிகள் பறங்கிமொழியைப் பேசிவந்தனர்.

-

இவ்விதமாகப் பறங்கியர் இந்தியாவுக்குப் புது வழி கண்டு பிடித்து, இந்திய தேசத்துடன் வாணிபம் செய்து பொருள் திரட்டிச் செல்வந்தராவதைக் கண்டு ஏனைய ஐரோப்பிய இனத்தாரும் இந்தியா தேசத்துடன் வாணிபம் செய்ய ஆவல் கொண்டனர். அவர்களுள் ஹாலண்டு12 என்னும் நாட்டிலுள்ள டச்சுக்காரரும் இம் முயற்சியில் முனைந்து நின்றார்கள். இந்த டச்சுக்காரருக்கு "ஒல்லாந்தர்" என்பதும் பெயர். இந்த ஒல்லாந்தர் இந்தியாவுக்கு வடகிழக்கு வழியொன்றைப் புதிதாகக் கண்டுபிடிக்க முயற்சி செய்தார்கள். கொலம்பஸ் ஐரோப்பாவுக்கு மேற்கு முகமாய் இந்தியாவுக்குப் போக ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயன்றாரல்லவா? பறங்கியர் ஐரோப்பாவுக்குத் தெற்கு முகமாய் ஆப்பிரிக்காவைச் சுற்றி கிழக்கு முகமாகச் சென்று, இந்தியாவுக்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தார்களே. அதைப்போலவே தாங்களும் ஐரோப்பாவுக்கு வடகிழக்குப் பக்கமாய்ச் சென்று இந்தியாவுக்குப் புதுவழி ஒன்றைக் கண்டுபிடிக்கலாமே என்று ஒல்லாந்தர் நினைத்தார்கள். அப்படி நினைத்தது அக்காலத்தில் பூகோள சாத்திரத்தை அவர்கள் சரிவர அறியவில்லை என்பதைத் தெரிவிக்கிறது. இந்த எண்ணத்தோடு அவர்கள் நான்கு கப்பல்களை இந்தியாவுக்கு வடகிழக்குப் பாதையைக் கண்டுபிடிக்க அனுப்பி னார்கள். இந்த முயற்சியில் அவர்கள் தோல்வியடைந்தார்கள். ஆனால், முன்பு அறிந்திராத சில தீவுகளையும், கடல்களையும் கண்டுபிடித்தார்கள். ஒல்லாந்தர் வடகிழக்குப் பக்கமாய்ப் புதுவழி கண்டுபிடிக்க முயற்சி செய்த அதேகாலத்தில், வேறு நான்கு கப்பல்களைப் பறங்கியர் கண்டுபிடித்த வழியைப் பார்த்துவரும்படி அனுப்பினார்கள். இக்கப்பல்கள் கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றாகிய சாவா (சாவகம்) தீவுவரையிற்சென்று திரும்பி வந்தன. அதுமுதல் ஒல்லாந்தர் இந்தியா தேசத்துடனும் கிழக்கிந்தியத் தீவுகளுடனும் வாணிபம் செய்யத் தொடங்கினார்கள் இந்திய வியாபாரத்தை முதலில் தனிப்பட்ட முறையில் நடத்தி வந்தனர். பின்னர் 1902 ஆம் வருசம் மார்ச்சு மாதம் '2' ஆம் நாள் “கிழக்கிந்திய வர்த்தகச் சங்கம்” என்னும் பேரால் ஒரு சங்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். இந்த ஒல்லாந்தர் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பறங்கியரை இந்தியா,