உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ons

ஸீகன் பால்கு ஐயர் (1683 -1719)

(Barthalomew Ziegenbalg)

கன்பால்கு ஐயர் செர்மனி தேசத்தவர். ஸக்ஸோனியா நாட்டின் சிறு பட்டணமாகிய புல்ஸ்நித்' நகரிற் பிறந்தவர். இவர் தமது 16-வது வயதில் பெற்றோரை இழந்தபடியால், இவரது தமக்கையார் இவரை வளர்த்துவந்தார். இளமையிலேயே கல்வியிலும் இசைப் பயிற்சியிலும் ஊக்கங்கொண்டு அவைகளைக் கருத்துடன் பயின்று வந்தார். பாடசாலையில் வாசிக்கும்போது தமது பிற்கால வாழ்நாளைச் சமய ஊழியஞ்செய்து கழிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார். 1703-ஆம் ஆண்டில் ஹாலி2 பட்டணத்திலுள்ள பல்கலைக்கழகத்திற் சேர்ந்து உயர்தரக் கல்வி பயின்றார். இவர் தமிழ்நாட்டிற்கு வந்த வரலாறு இதுவாகும்:-

3

அக்காலத்தில் தமிழ்நாட்டில் தஞ்சைக்கடுத்த தரங்கம் பாடியில், டென்மார்க்கு தேசத்தவராகிய டேனிஷ்காரர் வியாபாரம் செய்து வந்தனர். டென்மார்க்கு தேசத்தரசன் நாலாம் பிரதரிக் என்பவன் தரங்கம்பாடியில் வியாபாரஞ் செய்யும் டேனிஷ்காரர்களுக்கும் அங்கு வாழும் தமிழர்களுக்கும் மத உபதேசம் செய்து அவர்களைத் தெய்வகபக்தி உள்ளவர்களாகச் செய்யவேண்டும் என்னும் எண்ணங் கொண்டு, அதன் பொருட்டுச் சில மதபோதகர்களை அனுப்பிவைக்க விரும்பினான். இந்தியா தேசஞ் சென்று மதபோதனை செய்ய விரும்பும் மதபோதகர் யாரேனும் உளரோ என்று தேடியபோது, டன்மார்க்கு தேசத்தில் ஒருவரும் முன்வரவில்லை. ஆனால், செர்மனி தேசத்திற் பிறந்தவர்களான ஸீகன்பால்கு என்பவரும், பிளீச்சௌ என்பவரும் தரங்கம்பாடிக்குச் செல்வதாக ஒப்புக்கொண்டு முன்வந்தனர். இவ்விருவரும் டென்மார்க்கு தேசஞ் சென்று அரசனைக் கண்டார்கள். அரசனும் இவர்களை ஏற்றுக்கொண்டு, கி.பி. 1705-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ஆம் நாள் மரக்கலமேற்றி அனுப்பினான். ஸீகன்பால்கும், அவரது கூட்டாளியாகிய பிளீச்சௌ