உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 17

முதலியாராயிருந்த முத்துக்கிருஷ்ணா என்பவர்மேல் 'குறவஞ்சி நாடகம்' இயற்றியிருக்கிறார். இவர் மணப்பாறையில் காலமானார்.

கனகசபைப் புலவர் இவர் ஊர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அளவெட்டி. தமிழ்மொழியை நன்கு கற்றவர். விரைந்து கவிபாடும் திறமை வாய்ந்தவர். பல தனிக்கவிகளும், “அழகர் சாமி மடல்" "திருவாக்கு புராணம்" முதலிய நூல்களும் இயற்றியுள்ளார்.

·

குமாரகுல சிங்க முதலியார் : - இவர் ஊர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தெல்லிப்பழை. தமிழ், ஆங்கிலம் என்னும் இரண்டு மொழிகளையும் நன்கு கற்றவர். நியாய சபையிலே துவிபாஷியாகவும், பின்னர் உயர்தர உத்தியோகத் தராகவும் இருந்தவர். தமிழிற் பல தனிக்கவிகளும், “பதிவிரதை விலாசம் முதலிய நூல்களும் இயற்றியுள்ளார்.

சதாசிவம் பிள்ளை :- இவரது ஊர் யாழ்ப்பாணத்து மானிப்பாய். இவருக்கு ஆர்னால்ட்1 என்று மற்றொரு பெயரும் உண்டு. தமிழ்மொழியிலும் ஆங்கில மொழியிலும் வல்லவர். யாழ்ப்பாணக் கல்லூரியில் தமிழ்ப் புலவராக இருந்தவர். “உதய தாரகை என்னும் ஆங்கில-தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியராகப் பல ஆண்டுகள் இருந்தார். இவரியற்றிய நூல்கள்: "மெய்வேத சாரம்,” “திருச்சதகம், “நன்னெறி மாலை,” “நன்னெறிக் கொத்து, ” “சத்போதசாரம்,” “இல்லற நொண்டி,” “வெல்லையந்தாதி” என்னும் செய்யுள் நூல்களும், “நன்னெறி கதாசங்கிரகம்,” “பாவலர் சரித்திர தீபகம், ” “உலக சரித்திரம், சாஸ்திரம்” முதலிய வசன நூல்களுமாம்.

99 66

“வான

பவர் ஐயர்' : யூரேஷியர். தமிழ் மொழியை சாஸ்திரம் ஐயர் என்னும் சைன வித்துவானிடம் நன்கு கற்ற அறிஞர். புலவர்களால் நன்கு மதிக்கப்பட்டவர். திருநெல்வேலியில் வேதியர் புரத்தில் எஸ்.பி.ஜி. மிஷனரி சங்கத்தில் சமய ஊழியம் செய்தவர். சமய சம்பந்தமாகப் பல தமிழ் நூல்களை எழுதியவர். மிஷனரி சங்கங்கள் ஒன்று சேர்ந்து விவிலிய வேதத்தின் புதிய ஏற்பாட்டுத் தமிழ் மொழி பெயர்ப்பை நல்ல முறையில் திருத்த வேண்டுமென்று யோசித்த போது, திருத்தி எழுதும் பொறுப்பு இவருக்கு அளிக்கப்பட்டது. அந்தக் குழுவில் கால்டுவெல் ஐயர் அவர்களும் அங்கத்தினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தியமைப்பதை 1858-இல் தொடங்கி 1865-இல் முடித்தார். பின்னர் பழைய ஏற்பாட்டையும் திருத்தியமைக்க