உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

27

அலங்காரம் என்னும் பெயர் பெற்றிருப்பதனால். இது அணி இலக்கண நூல் என்பது தெரிகிறது. ஆனால், உண்மையில் இது அணி யிலக்கண நூல் அன்று: அகப்பொருளைக் கூறுகிற நூலாகும்.

இந்நூலைப் பற்றிக் களவியற் காரிகைப் பதிப்பாசிரியர் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் இவ்வாறு குறிப்பு எழுதுகிறார்:

66

கண்டனலங்காரம் எனக் குறிக்கப்பெற்றுள்ள நூல் பெரிதும் ஆராய்தற்குரியதொரு சிறந்த நூலாகும். சோழவரசர்களுள் ரண்டாம் இராஜராஜனுக்குக் ‘கண்டன்' என்ற சிறப்புப் பெயருள் ளமை தக்கயாகப் பரணி யுரையாலும், இராஜராஜ சோழனுலாவாலும் விளங்குகின்றது. வீரசோழிய வுரையால் வீரராசேந்திரனுக்கும் கண்டன் என்னும் சிறப்புப் பெயருண்மை தெளியலாம். இப்பெயர் சோழர்க்குரிய பொதுப் பெயராகப் பிற்காலத்தோரால் வழங்கப்பெற்றிருத்தலும் கூடும். இப்பெயர் பற்றிச் சிலாசாஸன ஆராய்ச்சியாளர் அறுதியிடும்வரை கண்டனலங்காரம்' யாரைக் குறித்து இயற்றப் பெற்றதென ஒரு தலையாகத் துணிந்து கூறுதல் ஏலாது.'

وو

பிள்ளையவர்கள் கூறுகிறபடி இந்நூல் சோழர்களைப் பற்றியது என்பதில் தடையில்லை. ஏனென்றால், இந்நூற் செய்யுள்களில் சோழர்களின் புகார் நகரம் (காவிரிப்பூம்பட்டினம்) கூறப்படுகிறது.

கண்டன் என்பது வீரன், ஆண்மகன், வலிமையுள்ளவன் என்னும் பொருளுடைய திராவிட மொழிச் சொல். இச்சொல் கன்னட மொழியில் வழங்குகிறது.

நச்சினார்க்கினியர், தொல்காப்பிய (பொருளதிகாரம், புறத் திணை யியல், 91-ஆம் சூத்திர) உரையில் கீழ்க்காணும் வெண்பாவை மேற்கோள் காட்டுகிறார். இது, கண்டனலங்காரத்தைச் சேர்ந்தது போலும்:

அறநீர்மை தாங்கி யளப்பரிதாய் வானப் புறநீர்போன் முற்றும் பொதியும்-பிறரொவ்வா

மூவேந்த ருள்ளும் முதல்வேந்தன் முத்தமிழ்க்குக் கோவேந்தன் கண்டன் குடை.

கண்டனலங்காரம் வெண்பாவினாலும் கலித்துறையினாலும் ஆன நூல். இந்நூலிலிருந்து கீழ்க்காணும் செய்யுள்களை களவியற் காரிகை உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார்: