உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

/ 85

ராசேந்திரன் (கி. பி. 1065-1070) என்பவனும் ஒருவன். வீரராசேந்திரனை வீரசோழன் என்றும் கூறுவார்கள். இவன் சளுக்கியருடன் மூன்று முறை போர் செய்து வென்றான். கிருஷ்ணை - துங்கபத்திரை என்னும் இரண்டு பேராறுகள் கூடுகிற இடமாகிய கூடல் சங்கமம் என்னும் இடத்தில் நடந்த போரிலே, இவன் பெரிய வெற்றியடைந்தான். சளுக்கிய அரசனான ஆகவமல்லனும் அவனுடைய படைத்தலைவர்களும், கடல்போன்ற சேனையும் வீரராசேந்திரனால் முறியடிக்கப்பட்டனர்.

வீரராசேந்திரன் காலத்தில் இருந்த புத்தமித்திரனார் என்னும் புலவர், அவ்வரசன் பெயரினால் வீரசோழியம் என்னும் இலக்கண நூலை இயற்றினார். வீரசோழியத்திற்கு உரை எழுதிய பெருந்தேவனார், தமது உரையில் இரண்டு வெண்பாக்களை மேற்கோள் காட்டுகிறார். அவ் வெண்பாக்களில் சோழன் பெற்ற கூடல சங்கமத்து வெற்றி கூறப்படுகிறது.

66

"விண்கூ டலசங்க மத்துடைந்த வேல்வடுகர் எண்கூ டலறு மிருங்கானிற் கண்கூடப்

66

பண்ணினான் றன்னுடைய பாதம் பணியாமைக் கெண்ணினார் சேரும் இடம்.

99

'மின்னார் வடிவேற்கை வீரரா சேந்திரன்றன் பொன்னார் பதயுகளம் போற்றாது - கன்னாடர் புன்கூ டலசங்க மத்தினெடும் போருடைந்தார் நன்கூ டலசங்க மத்து.

9942

இவ்வரசன் பெற்ற வெற்றியைச் சிறப்பித்து இவன் மேல் கூடலசங்கமத்துப் பரணி பாடப்பட்டது. என்னை?

66

கூடல

சங்கமத்துக் கொள்ளுந் தனிப்பரணிக் கெண்ணிறந்த

துங்கமத யானை துணித்தோனும்.

என்று விக்கிரம சோழன் உலாவும்.

“பாட வாரிய பரணி பகட்டணிவீழ்

கூடலார் சங்கமத்துக் கொண்டகோன்'

என்று இராசராச சோழன் உலாவும் கூறுவது காண்க.

இந்தப் பரணி இப்போது கிடைக்கவில்லை. இதைப் பாடிய

புலவர் பெயர் முதலியனவும் தெரியவில்லை. 43