உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

91

1.

2.

3.

4.

5.

6.

7.

அடிக்குறிப்புகள்

இச்செய்யுளை இளம்பூரண அடிகள் (தொல். பொருள். புறத் திணையியல், "கூதிர் வேனில் என்றிரு பாசறை" என்னும் சூத்திர உரை) மேற்கோள் காட்டியுள்ளார்.

இவ்வாறே, சிலப்பதிகாரத்தையும், கோவலன் வரலாறு நிகழ்ந்த மிகப் பிற்காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டது என்று, அகச்சான்று புறச்சான்றுகளைப் பாராமல் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் கூறுகிறார். அதைப்பற்றி ஆராய்வதற்கு இது இடம் அன்று சமயம் வாய்ப்புழி ஆராய்வோம்.

என் சரித்திரம், பக்கம் 876-877; 1950-ஆம் ஆண்டுப் பதிப்பு. "மொய்வேற் கையர்" எனத் தொடங்கும் இச்செய்யுளை நச்சினார் கினியர் மேற்கோள் காட்டி (தொல். பொருள். புறத்திணை, "கொள் ளார்தேஎங் குறித்த கொற்றமும்" என்னும் சூத்திரவுரை). “இது, பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது என்று விளக்கம் எழுதுகிறார்.

து

وو

"நாளும் புள்ளும்” எனத் தொடங்கும் இச்செய்யுளை நச்சினார்க் கினியர் தொல்காப்பிய (பொருள். புறத்திணை, “படையியங் கரவம்’ என்னும் சூத்திரம்) உரையில் மேற்கோள் காட்டி, "இது விருச்சி விலக்கிய வீரக்குறிப்பு” என்று விளக்கம் எழுதுகிறார். ஆனால், இது எந்த நூல் செய்யுளென்பதைக் குறிக்கவில்லை. இது தகடூர் யாத்திரை என்னும் நூலைச் சேர்ந்தது என்பது புறத்திரட்டி னால் அறியக் கிடக்கிறது.

"இருநில மருங்கின்” எனத் தொடங்கும் இச்செய்யுளை நச்சினார்க் கினியர் தொல்காப்பிய (பொருள். புறத்திணை "படையியங்கரவம்" என்னும் சூத்திரம்) உரையில் மேற்கோள் காட்டி, "இது மறவர் கூற்று" என்று எழுதுகிறார். ஆனால், இது எந்நூற் செய்யுளென்று கூறவில்லை. புறத்திரட்டினால், இது தகடூர் யாத்திரைச் செய்யுள் என்பது தெரிகிறது. "தற்கொள் பெருவிறல்" என்னும் இச்செய்யுளை நச்சினார்க்கினியர் தொல். பொருள். புறத்திணை, “தானை யானை குதிரை என்ற" என்னும் சூத்திர உரையில் மேற்கோள் காட்டுகிறார். ஆனால் இது எந்த நூற் செய்யுள் என்பதைக் கூறவில்லை. புறத் திரட்டிலிருந்து இது தகடூர் யாத்திரைச் செய்யுளென்று தெரிகிறது.