உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

66

நாளடி யிடுதல் தோன்று

நம்முயிர்ப் பருகுங் கூற்றின் வாளின்வாய்த் தலைவைப் பாக்குச்

செல்கின்றோம் வாழ்கின் றாமே.

"நன்கன நாறுமி தென்றிவ்

வுடம்பு நயக்கின்ற தாயின்

ஒன்பது வாயில்க டோறு

முண்ணின் றழுக்குச் சொரியத்

தின்பதொர் நாயு மிழுப்பத்

திசைதொறுஞ் சீப்பில்கு போழ்தின்

இன்பநன் னாற்ற மிதன்க

ணெவ்வகை யாற்கொள்ள லாமே.

66

"மாறுகொள் மந்தர மென்று

மரகத வீங்கெழு வென்றுந்

தேறிடத் தோள்க டிறத்தே

திறத்துளிக் காமுற்ற தாயிற்

பாறொடு நாய்க ளிசிப்பப்

பறிப்பறிப் பற்றிய போழ்தின்

ஏறிய வித்தசை தன்மாட்

டின்புற லாவதிங் கென்னோ.

99

“வேரிக் கமழ்தா ரரசன் விடுகென்ற போழ்துந்

---

وو

117

16

17

18

19

இது குண்டல

தாரித்த லாகா வகையாற் கொலைசூழ்ந்த பின்னும் பூரித்தல் வாடுத லென்றிவற் றாற்பொலி வின்றிநின்றான் பாரித்த தெல்லாம் வினையின்பய னென்ன வல்லான். “துன்னார்க்கு மீர்ம்பால் சுரந்தான்' இது குண்டல கேசி.’7 ""மலைதோன்றப் பைத்தக மெரிப்பவும்' என்று கூறுவர், தக்கயாகப் பரணி உரையாசிரியர். நீலகேசி நூலின் உரையாசிரியர். தமது உரையில் சில பௌத்த மதச் செய்யுள்களை மேற்கோள் காட்டுகிறார். ஆனால், அச்செய்யுள் கள் எந்த நூலைச் சேர்ந்தவை என்பதைக் கூறவில்லை. அந்நூல் பதிப்பாசிரியர், அச்செய்யுள்கள் குண்டலகேசி நூலைச் சேர்ந்தவை என்று குறிப்பிடுகிறார். அச்செய்யுள்கள் இவை:

கேசி"8