உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

மேயோ பிரபு அரசப் பிரதிநிதியாக இருந்த காலத்தில் 1870-ஆம் ஆண்டில் மீண்டும் இந்த இலாகா தொடங்கப்பட்டு, அலெக்சாண்டர் கன்னிங்காம் அவர்களே இதன் தலைமை உத்தியோகஸ்தராக நியமிக்கப்பட்டார். இந்த இலாகா வட இந்தியாவுக்கு மட்டும் ஏற்பட்டிருந்தது.

1874-ஆம் ஆண்டில் இந்தியாவின் தென் பகுதிக்கும் ஆர்கியாலஜி இலாகா ஏற்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிரிக்கப்பட்டிருந்த பம்பாய் மாகாணம் சென்னை மாகாணம் என்னும் இரண்டு மாகாணங்களுக்கும் இந்த இலாகா ஏற்பட்டிருந்தது. அஃதாவது மேற்கு இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இந்த இலாகா அமைந்திருந்தது. எனவே, தமிழ் நாட்டுக்கு ஆர்க்கியாலஜி இலாகா ஏற்பட்டது. இந்த ஆண்டில் தான். இந்த இலாகாவின் தலைமை அலுவலாளர் அரசாங்க ஆர்க்கியாலஜிகல் சர்வேயரும் அறிக்கையாளரும்' என்று பெயர் பெற்றிருந்தார். பிறகு 1878-ஆம் ண்டில் ‘புதைபொருள் உரிமைச்சட்டம்” ஏற்படுத்தப்பட்டது.

6

வட இந்திய ஆர்க்கியாலஜி இலாகாவின் தலைவராக இருந்த அலெக்சாண்டர் கன்னிங்காம் அவர்கள் 1885-ஆம் ஆண்டில் அலுவலி லிருந்து விலகிக்கொண்டு ஒய்வு பெற்றுக்கொண்டார். இந்த ஆண்டிலே, வட இந்திய தென் இந்திய இலாக்காக்கள் இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு இந்திய தேசம் முழுவதுக்கும் ஒரே ஆர்க்கியாலஜி இலாகா ஏற்படுத்தப்பட்டது. இந்த இலாகாவின் தலைவர், டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஆர்க்கியாலஜி என்று பெயர் பெற்றார். இந்த இலாகாவின் தலைவராக முதன் முதல் அலுவல் செய்தவர் டாக்டர் ஜேம்ஸ் பர்கஸ்' என்பவர். இவர் காலத்தில், சாசன எழுத்துக்களை ஆராய்ந்து சாசனங்களை அச்சிடுவதற்கு எபிகிராபிஸ்டு என்னும் பெயருள்ள ஒரு சாசன ஆராய்ச்சியாளர் ஏற்படுத்தப்பட்டார். முதன் முதலாக சாசன எழுத்து ஆராய்ச்சியாளராக இருந்தவர் Dr. E.Hultzsch என்பவர். இவர் தென் இந்திய சாசன எழுத்து ஆராய்ச்சியில் தேர்ந்த நிபுணர். அன்றியும் வட மொழி, பாலி மொழி சாசன எழுத்து ஆராய்ச்சியிலும் வல்லவர்.

சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே தென் இந்திய சாசனங்கள், இந்திய சாசனங்கள், இந்தியப் பழஞ் செய்திகள்° என்னும் பெயருள்ள வெளியீடுகள் வெளிவந்தன. இந்த வெளியீடுகளில் ஏனைய இந்திய