உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

49

எண்கள் என்று பெயர் சூட்டினார்கள். மிஷனரி பாதிரிமார்கள் அந்த எண்களை மீண்டும் நமது நாட்டில் பாடசாலைகளில் புகுத்தினார்கள். இதனை இன்னுஞ் சற்று விளக்கமாகக் கூறுவோம்.

கிய

ஆதிகாலத்தில், அராபியர் கலை பண்பாடுகளில் வளர்ச்சி யடையாமல் இருந்தனர். இவர்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இஸ்லாம் மதத்தைப் பரப்புவதற்காகச் செய்த முயற்சியின் காரணமாகப் பெரியதோர் முஸ்லிம் சாம்ராச்சியத்தை அமைத்தார்கள். குறு காலத்தில் இவர்கள் கிழக்கே மத்திய ஆசியா முதல் மேற்கே ஆ ஆபிரிகாக் கண்டத்தில் மொராக்கோ நாடு வரையில் பல நாடுகளையும் தேசங்களையும் கைப்பற்றி இஸ்லாம் மதத்தைப் பரப்பினார்கள். மற்றும் ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதி நாடுகள் சிலவற்றையும் கைப்பற்றி அரசாண்டார்கள்.

இவ்வாறு பெரிய சாம்ராச்சியத்தை அமைத்த அராபியர், தாங்கள் வென்ற நாடுகளில் இருந்த சிறந்த கலைகளையும் பண்பாடு களையும் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் காகிதம் செய்தல், அச்சு அடித்தல் முதலிய கலைகளைச் சீனரிடமிருந்து கற்றுக்கொண்டது போல, பாரத நாட்டிலிருந்து எண்களின் வரிவடிவங்களைப் பெற்றுக் கொண்டார்கள். ஆதியில் அராபியர் களுக்கு எண்கள் (வரிவடிவ எண்கள்) கிடையா. எண்களையும் எண்களின் தொகைகளையும் எழுத்தினாலே எழுதினார்கள். பாரத நாட்டிலே எண்களுக்குத் தனி வரிவடிவம் வழங்கியதை அராபியர் கண்டு, இந்த எண்களின் வரிவடிவத்தைத் தாங்களும் ஏற்றுக் கொண்டார்கள். இந்த எண்களை அரபிநாட்டிலும் எகிப்து, மொராக்கோ முதலிய நாடுகளிலும் வழங்கினார்கள்.

அந்தக் காலத்திலே ஐரோப்பிய நாடுகளில் உரோம எண்கள் வழங்கப்பட்டன. உரோமர் எண் என்பது, உரோம் நாட்டார் பழைய காலத்தில் எழுதி வந்த எண்கள். உரோம எண்கள் இவ்வாறு எழுதப்பட்டன: I, II, III, IV, V, VII, VIII, IX, X. இந்த எண்கள் கணிதம் எழுதுவதற்கு ஏற்றவை அல்ல. உதாரணமாகப் பதினெட்டை இருபத்தெட்டால் பெருக்க வேண்டுமானால், இந்த எண்களினால் பெருக்கி விட எழுதுவது சங்கடமானது. XVIII X XXVIII இவ்வாறு எழுதிப் பெருக்க வேண்டும். பெருக்குத் தொகையை எழுதுவதும் சங்கடம். 1958 என்னும் எண்ணை உரோமன் எண்ணினால் எழுதும்போது MDCC

×