உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்

பெற்றதாம் பேதையோர் சூத்திரம் - மற்றதனை நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லித்தன் புல்லறிவு காட்டி விடும்.

பாடமே ஓதிப் பயன்தெரிதல் தேற்றாத

மூடர் முனிதக்க சொல்லுங்கால் - கேடருஞ்சீர்ச் சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை ஈன்றாட் கிறப்பப் பரிந்து.

நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்கும் தீப்புலவர் சேரார் செறிவுடையார் - தீப்புலவன் கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும்; அல்லாக்கால்,

தோட்புடைக் கொள்ளா எழும்.

மனப்பாடஞ் செய்த சிறு நூல்களுக்குத் தக்க ஆசிரியரிடம் பாடங்கேட்டுப் பொருள் அறிந்த மாணவர், வேறு பிரபந்த நூல்களைக் கற்பர். காரிகை முதலிய இலக்கண நூல்களையும் பாடங் கேட்பர். பிறகு திருக்குறள், கம்பராமாயணம், கந்தபுராணம், பெரிய புராணம், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலிய பெரிய நூல்களைப் பாடங் கேட்பார்கள். செய்யுள் இயற்றவும் கவி பாடவும் வல்லவர் ஆவார்கள். அக்காலத்தில், கல்வி பயின்ற மாணவரும் வித்துவான்களும் புலவர்களும் விரைவில் கவி பாடும் ஆற்றல் பெற்றிருந்தனர். நினைத்தவுடன் கவி பாடும் வல்லமை அவர்களுக்கிருந்தது. ஆனால், வசனம் எழுதப் பழகவில்லை. பழகாத காரணத்தினால், வசன நடையில் நூல் எழுதுவது அவர் களுக்குக் கடினமான செயலாக இருந்தது.

-

அக்காலத்திலே மாணவருக்குப் பாடஞ் சொல்லிய நல்லாசிரி யர்களான வித்துவான்களும், மகாவித்துவான்களும் இருந்தார்கள், அவர்களிடம் மாணவர்கள் சென்று கல்வி கற்றனர். இவர்கள் அல்லாமலும் ஆங்காங்கே மடாலயங்களும் இருந்தன. அந்த மடாலயங்களிலும் தக்க புலவர்களைக் கொண்டு இலக்கண இலக்கிய நூல்கள் மாணவர்களுக்குப் பாடஞ் சொல்லப்பட்டன. மடாதிபதிகளில் சிலர் தாங்களே பாடஞ் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தனர்.

திருவாவடுதுறை மடம், தருமபுர மடம், திருப்பனந்தாள் மடம், காஞ்சி ஞானப்பிரகாசர் மடம், மதுரைத் திருஞான சம்பந்தர் மடம், திருநெல்வேலி செங்கோல் மடம், கும்பகோணம், சிதம்பரம்,