உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

பிங்கலன், வாமனன் என்பவர்களைப்பற்றிய கதையைச் செய்யுளாகக் கூறும் இந்நூல்கள், ஜைன சமய நூல்கள் எனத் தோன்று கின்றன. இந்நூல்களைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை.

54. பிங்கலகேசி, 55. அஞ்சனகேசி,

56. காலகேசி, 57. தத்துவ தரிசனம்

இந்த நான்கு நூல்களை யாப்பருங்கல விருத்தியுரைகாரர் தமது உரையில் குறிப்பிடுகிறார். யாப்பருங்கலம் ஒழிபியலில் அவர் எழுதுவது வருமாறு:

66

தரு க்கமாவன: ஏகாந்தவாதமும் அநோகந்தவாதமும் என்பன. அவை குண்டலம், நீலம், பிங்கலம், அஞ்சனம், தத்துவ தரிசனம், காலகேசி முதலிய செய்யுள்களுள்ளும், சாங்கிய முதலிய ஆறு தரிசனங்களுள்ளுங் காண்க.

இதில், இவர் கூறுகிற குண்டலம் என்பது குண்டலகேசி என்னும் நூல். அது பௌத்த நூல். இந்நூலின் சில பாக்கள் மட்டும் கிடைத் துள்ளன. (இதைப்பற்றி இந்நூல் 114ஆம் பக்கம் காண்க.) நீலம் என்பது நீலகேசி. இது இப்போது அச்சிடப்பட்டிருக்கிறது. பிங்கலம் என்பது பிங்கலகேசி, அஞ்சனம் என்பது அஞ்சனகேசி. இந்நூல்கள் இப்போது கிடைக்கவில்லை. அவ்வாறே தத்துவ தரிசனமும், காலகேசியும் கிடைக்கவில்லை. எனவே இந்நூல்கள் இறந்துபட்டன போலும்.

இந்த நூல்கள் எல்லாம் பௌத்தம் அல்லது ஜைனம் என்னும் மதங்களைச் சார்ந்தவை.

யாப்பருங்கல உரையாசிரியர், பிங்கலகேசியைப் பற்றி மேலும்

எழுதுகிறார்:

"பிங்கலகேசியின் முதற்பாட்டு இரண்டாமடி ஓரெழுத்து மிகுத்துப் புரிக்காகப் புணர்த்தார்.

(ஒழியியல் உரை)

"தளைசீர் வண்ணமாமாறு சொன்ன இலக்கணமும் தளைசீர் வண்ணம் எனப்படும் உபசார வழக்கினால். குண்டல நீல பிங்கல கேசிகளது தோற்றமும் தொழிலும் சொன்ன விலக்கணச் செய்யுள் களும் பிரித்து வேறோ ருபசாரத்தினாற் குண்டலகேசி நீலகேசி பிங்கல கேசி என்னும் பெயர் பெற்றாற்போல எனக்கொள்க.”

(எழுத்தோத்து உரை)