உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

இரேனியூசையர் 1838-ஆம் ஆண்டு காலஞ்சென்ற போது, அவர்மீது உவின்பிரிட்டையர் பாடிய கையறு நிலைச்செய்யுள் இது:

ஆயிரத் தெண்ணூற் றாறாரிரு வருடம் காய மடைந்த குணமைந்தா-காயமதில்

ஆறெட் டரைவயதில் அப்பதிக்குப் போனீரோ இரேனியூ சையா நீர்.

இவர் இயற்றிய நூல்கள். திருப்போராடல். இது Bunyan's Holy War என்னும் நூலின் மொழிப் பெயர்ப்பு, 1844-இல் இதனை இயற்றினார். தாவீதரசன் அம்மானை (1865), உதிரமகத்துவம் (இரண்டு பாகங்கள்), இரத்தினாவளி நாடகக் கதை, சான்றோர் குலமரபு காத்தல்.

இவருடைய வாழ்க்கை வரலாற்றை இவருடைய மகன் என்றி மார்ட்டின் உவின்பிரிட் உபாத்தியாயர், “கனம் பொருந்திய உவின் பிரிட்டையர் ஜீவ விருத்தாந்தம்” என்னும் பெயரால் எழுதி 1880-இல் அச்சிட்டார்.

இராமலிங்கம் பிள்ளை (?-1885)

இவர் ஊர் யாழ்ப்பாணம். நாவலியூர் கா. முத்துக் குமாரப் பிள்ளையிடம் கல்வி பயின்றார். கல்வளையந்தாதி: மாணிக்க வாசகர் விலாசம். நளச்சக்கரவர்த்தி விலாசம் என்னும் நூல்களை இயற்றினார். அழகிய சொக்க நாதபிள்ளை (?-1885)

திருநெல்வேலி

தச்சநல்லூர் இவரூர். தந்தையாராகிய வன்னியப்ப பிள்ளையிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். திருநெல்வேலி முனிசீப்பு கோர்ட்டில் எழுத்தாளர் உத்தியோகத்தில் இருந்தார். நகைச்சுவையுடன் பேசுவார். முத்துசாமி பிள்ளை என்னும் பெரும் செல்வரிடம் நண்பராக இருந்தார். அவர்மேல் காதல் பிரபந்தம் ஒன்று இயற்றினார்.

கவிராச நெல்லையப்பப்பிள்ளை, கல்போத்து புன்னை வனக் கவிராயர், இராமசாமிக் கவிராயர், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார், முத்துவீருப்புலவர், கந்தசாமிப் புலவர், திருநெல்வேலி முத்துப்புலவர், வேம்பத்தூர் பிச்சுவையர் முதலியோர் இவர் காலத்தவர்.