உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

215

சுப்பராய செட்டியார், பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளை யாடற் புராணத்துக்கு உரை எழுதினார். கம்பராமாயணம் அயோத்தியா காண்டத்திற்கு உரை எழுதினார். சந்தனபுரி என வழங்கும் எயினனூர் ஆதிபுர தலபுராணத்தை இயற்றினார். பதினோராந்திருமுறை முழுவதையும், பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து முதன்முதலாக அச்சிட்டார் (1869). மகாவித்துவான் பிள்ளையவர்கள் இயற்றிய மாயூரப் புராணத்தையும், நாகைக் காரோணப் புராணத்தையும் அச்சிட்டார். காஞ்சிப் புராணத்துக்கும், புவியூர் வெண்பாவுக்கும் உரை எழுதி அச்சிற் பதிப்பித்தார். காங்கேயேன் உரிச்சொல் நிகண்டு, சிதம்பரசுவாமி இயற்றிய திருப்போரூர் சந்நிதிமுறை என்னும் நூல்களையும் அச்சிற் பதிப்பித்தார்.

இதுவரையில் 19-ஆம் நூற்றாண்டில் இருந்த புலவர்களின் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறினோம். அவர்கள் பிறந்த ஆண்டு, இறந்த ஆண்டுகள் தெரிந்தமையால் கூடியவரையில் அவர்களை ண்டுக் கணக்குப்படி வரையறுத்து முறைப்படுத்தி எழுதினோம். பிறந்த ஆண்டும்மறைந்த ஆண்டும் தெரியாத புலவர்களைப்பற்றி, 19– ஆம் நூற்றாண்டில் இருந்தவர்கள் -, அகர வரிசையில் இங்கு எழுதுகிறோம்.

அப்பாவுப் பிள்ளை

திரிசிரபுரத்தில் இருந்தவர். இவரைப் பற்றி ஒன்றும் தெரிய வில்லை. சித்திராங்கி விலாசம் (1886), நன்னெறி சத்தியாஷை அரிச்சந்திர விலாசம் (1890), நூதன புகழேந்தி சபா (1893) என்னும் நூல்களை எழுதினார்.

அப்பாவு முதலியார்

19-ஆம் நூற்றாண்டில் இருந்தவர். முடிச்சூர் இவருடைய ஊர். இவர் இயற்றிய நூல்கள்: குமரேசவிசயம், தென்னாசாரியப் பிரபாவத் தீபிகை, சற்சம்பிரதாய தீபிகை, விட்டுணு தத்துவ விளக்கம், இராமாநுச நூற்றந்தாதிக்கு உரை எழுதினார்.

அண்ணாமலை ரெட்டியார்

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவர். பாண்டி நாட்டுக் கரிவலம்வந்த நல்லூருக்கு அடுத்த சென்னிக்குளம் இவருடைய ஊர்: முகவூர் மீனாட்சி சுந்தரக் கவிராயரின் மாணவர். ஊற்றுமலை