உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

231

சதகம், காஞ்சிபுரம் மாத்ருபூத ஐயரால் 220-விருத்தங்களினால் இயற்றப்பட்டது. அந்த நூலுக்குப் பிள்ளையவர்கள் உரை எழுதி, தொண்டை மண்டலம் அச்சியந்திர சாலையில் 1894-95-ஆம் ஆண்டில் அச்சிட்டார். அவ்வுரையைப் பாராட்டி, புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் மாணாக்கர் மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளையவர்கள் அளித்த சாற்றுகவி இது.

66

'அந்த மண்டலத் தவன்றனக் கிளையவ னுளரி யுறைகின்ற சொந்த மண்டல மீதெனச் செந்தமிழோர் சொலு நெறியோர்ந்து நந்த மண்டல சதகமா மாதுரு பூதநா லவனோத

இந்த மண்டலஞ் சொலத்திரு வேங்கடக் கவியுரை யிசைத்தானே.

துருஐயர்12

இவர் ஐரோப்பியப் பாதிரியார். இயற்றமிழாசிரியர் இராமாநுசக் கவிராயரிடம் தமிழ் பயின்றார். கிறிஸ்து சமயச்சார்பான துண்டுப் பிரசுரங்கள் பவலற்றைத் தமிழில் எழுதி வெளியிட்டார். நன்னூலுக்கு காண்டிகை உரை எழுதும்படி கேட்டுக்கொண்டவர்களில் இவரும் ஒருவர். காண்டிகை யுரை எழுதிய இராமநுசக் கவிராயர், அவ் வுரைப்பாயிரத்தில் இவரை.

66

"இல்லையாத் தன்னிக ரெனஉல கோதுறூஉம்

முல்லையாத் துருவெனும் ஒளிகொள் போதகன்

என்று கூறியிருக்கிறார்.

இராமாநுசக் கவிராயர் திருக்குறள் 63 அதிகாரங்களுக்குப் பரிமேலழர் உரையுடன் தமது விளக்க உரையும் எழுதி அச்சிட்ட போது, இவர் அதற்கு ஆங்கிலத்தில் விளக்கம் எழுதினார். இக்குறள் 1840-1852-ஆம் ஆண்டுகளில் பகுதி பகுதியாக அச்சிடப்பட்டது. துரைசாமி மூப்பனார்

சோழ நாட்டினர். இவர் இயற்றிய நூல்கள் அயோத்திநகர் மான்மியம் (1881), பிரசன்ன ராகவம் (1883) ஹம்ச சந்தேசம் (1883), மகாபாரதச் சுருக்கம், கம்பராமாயண அருங்கவிப் பொருள் விளக்கம், ஜானகி பரிணயம்.