உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

சனகா புரத்து ளினையாச் சால்பமை

சன்மதி தந்த வண்மைகூர் சிறப்பிற் பவணந்தி யுரவோன் றுவளற வகுத்த நன்னூ லென்னு மந்நூற் கிடந்தன பொருளொரு சேரத் தெருளுறச் சூழ்ந்து செந்தமிழ் நாடே யன்றியு மாந்திர மலாடு கருநடங் குலாவுமிவ் வாதித் தேத்தும் வழங்குந் திறன் றிறம்பாமை யொருமொழிக் குரியவ ரன்றியும் விரவும்

ஐங்கிலி யம்முத லறிஞரு மேற்க

ஆரியந் திரவிட மாந்திரங் கருநடம்

ஒரு மைங்கிலியத் துரைபொதுச் சிறப்பு நடைநு தலியன வடைவிற் கற்பவர் பல்வகை நலனறி மல்கு முணர்ச்சியின் உள்ளக் கிளர்ச்சியுங் கொள்ளப் பெறுவன நூன்மொழி பெயர்க்கும் வாய்மைக் கருவியுந் தெள்ளியோர் பயனடை செவ்வியுட் கொள்ளுபு நந்தியம் பொருப்பி னந்தியும் பகலும்

30

35

40

அருகா வளங்கெழூஉம் வருவாய்த் திரிபிலாப் பார்வ யினின்பு நீள்வழி யுதவுறூஉம்

45

பாற்பெய ராற்றொழுக் கேற்பதெஞ் ஞான்றும் ஏனைநா டவைபோ லாதிரு மைக்கும்

பிறவிக் கெல்லை காணுஉ நிறைவுறக் கல்லாப் புணரு நயனுடை நல்லோர்

பெட்புறுந் திருவின தொட்பமார் தொண்டை நட்டாட் டிடைநீள் பன்மாண் புகழ்மை

மன்னுதெண் டிரைசூழ் சென்னையம் பதிக்க

ணிறைகொளும் புலமைத் துறைவந்தவர்தங்

குழுவகங் கவரா மகிழ்தலை சிறப்ப

ஒருதான் கண்டவை பிறருந் தெரிகெனு

நீக்கமி லுள்ளத் தார்வநன் கூக்கத்

தண்டரும் பெயரிய பண்டையோர் நூல்வழிப்

பன்னுதொல் காப்பிய நன்னூ லெனவும்

ஐந்திர பாணி னீய மெனவும்

50

55

60