உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு /61

எயிலெறி வல்வில் ஏவிளங்கு தடக்கை

ஏந்தழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறை

என்று பாடுகிறார்.

இதிலும், சான்றோர் என்னும் சொல் போர்வீரர் என்னும் பொருளில் வழங்கப்பட்டுள்ளது காண்க. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், சான்றோர்க்கு (வீரர்களுக்கு) மெய்ம்மறை (கவசம்) போன்று இருக்கிறான் என்று கூறப்படுகிறான். அதாவது, போர்க்களத்திலே போர் வீரர்களைப் பின்னே தள்ளித் தான் அவர் களுக்கு முன்பாக நின்று, அவர்களுக்குக் கவசம்போல இருக்கிறான் என்பது பொருள்.

பதிற்றுப்பத்து, 7-ஆம் பத்தைக் கபிலர் என்னும் புலவர் பாடி, செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் அரசனைப் புகழ்கிறார். அதில், எஃகாடு ஊணங் கடுப்பமெய் சிதைந்து

சாந்தெழில் மறைத்த சான்றோர் பெருமகன்

என்று பாடுகிறார்.

இறைச்சி விற்கும் ஊன் வாணிகன், இறைச்சியைக் கத்தியால் கொத்தும் மரக்குறடு (ஊணம்) போன்று போர்க்களத்திலே மார்பிலும், உடம்பிலும் புண்பட்ட வடுக்கள் நிறைந்திருக்க, அவ்வடுக்களைச் சந்தனம் பூசி மறைத்திருக்கிற போர்வீரர்களின் (சான்றோரின்) பெருமகன் என்பது இதன் கருத்து. இதிலும், போர் வீரர், சான்றோர் என்று கூறப்பட்டிருத்தல் காண்க.

தகடூர்ப் போரைப்பற்றிக் கூறுகிற தகடூர் யாத்திரை என்னும் நூலிலேயுள்ள செய்யுள்களிலும், போர்வீரர், சான்றோர் எனக் கூறப்படுகின்றனர். அச்செய்யுள்கள்:

கூற்றுறழ் முன்பி னிறைதலை வைத்தபின் ஆற்றியவனை யடுதல்; அடாக்காலை

ஏற்றுக் களத்தே விளிதல்; விளியாக்கால்

மாற்ற மளவுங் கொடுப்பவோ சான்றோர்தம் தோற்றமும் தேசும் இழந்து.

காலாளாய்க் காலாள் எறியான்; களிற்றெருத்தின்

மேலாள் எறியான்; மிகநாணக்

-

காளை