உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

63

சான்றோர் என்னும் சொல்லுக்கு வேறு பொருள் இருக்க வேண்டும். அப்பொருள் யாது? அது தான் வீரர் என்பது.

வீரர்கள் தேகபலம் மிகுந்தவர்கள், ஆகையினாலே, ஐம் புலன்களை அடக்கும் ஆற்றல் இல்லாதவர்கள். ஆகவே, அவர்கள், தாய், மகள், உடன் பிறந்தாள் இவர்களுடன் தனித்து வசித்தல் கூடாது என்பது இச்செய்யுளின் உண்மைக் கருத்தாகும்.

ஈன்று புறந்தருதல் என்றலைக்கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

என்பது, புறம் 312-ஆம் செய்யுள், பொன்முடியார் என்னும் புலவர் பாடியது. திணை; வாகை; துறை; மூதின் முல்லை.

66

இந்தச் செய்யுளுக்குப் பழைய உரை காணப்படவில்லை. இதில், 'சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" என்னும் அடிக்கு இக் காலத்தவர் இவ்வாறு பொருள் கூறுகிறார்கள். தன் மகன் அறிவுள்ள வனாகச் செய்வது தந்தையின் கடமையாகும் என்பது இக்காலத்தவர் இதற்குக் கூறுகிற உரை. இங்குச் சான்றோன் என்னும் சொல்லுக்கு அறிஞன் என்று பொருள் கொண்டால் அது இச்செய்யுளின் கருத்துக்கு முரண்படுகிறது. அறிஞன் என்று பொருள் கொண்டால் அவ்வறிஞன், வேல் வாள் முதலிய படைக்கலப் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும் என்றும், அவன் போர்க்களம் சென்று போர் செய்வதுமட்டும் அல்லாமல், யானைப்படையுடன் போர் செய்து வெற்றியுடன் திரும்பி வர வேண்டும் என்றும் முடிவு கட்டவேண்டும். இவை அறிஞரின் தொழில் அல்ல; போர் வீரர்களின் கடமையாகும். ஆகவே, சான்றோன் என்னும் சொல்லுக்கு இவ்விடத்தில் அறிஞன் என்று பொருள் கொள்வது தவறாகிறது; வீரன் என்று பொருள் கொள்வது சாலவும் பொருந்துகிறது.

இச்செய்யுளின் திணையும் துறையும் இதனை வலியுறுத்து கின்றன. திணை: வாகை; போர்ச் செயலுக்கு உரியது. துறை: மூதின் முல்லை. மறக்குடியில் பிறந்த வீரமகளின் வீரத்தைக் கூறுகிறது. மறக்