உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

77

கிளறுகிறார்களே, அதுபோல, புத்துருக்கு நெய்யுடன் கற்கண்டுப் பொடியைக் கலந்து பாகு காய்ச்சி வைத்துக்கொண்டு, பழவரிசியுடன் மணிப்பருப்பையும் சர்க்கரையையுங் கலந்து பலாப்பழத்தைத் துண்டு துண்டாக நறுக்கிப் போட்டுச் சர்க்கரைப் பொங்கல் செய்து, முந்திரிப் பருப்பும் திராட்சைப் பழமும் ஏலக்காயும் குங்குமப்பூவும் இட்டு, நெய்விட்டுக் கிளறி, இதனுடன், முன்பு காய்ச்சி வைத்திருக்கும் கற்கண்டுப் பாகையும் சர்க்கரைப் பாகையும் அடைத்துக் (கலந்து) கிளறிப் பாகடை செய்தால், அதற்குப் பாகடை என்றுதானே பெயர் சூட்ட வேண்டும்!

இவ்வாறு இனிப்புப் பாகுகளையும் உருசியுள்ள சுவைப் பொருள்களையும் அடைத்துச் (கலந்து) செய்யப்பட்ட பாகடை, அதன் பெயருக்கேற்ப மிக இனிய சுவையுள்ள பலகாரமாகத்தான் இருக்கும். இந்தப் பாகடை என்னும் பெயர், பேச்சு வழக்கில் பாவடை ஆகி, காலப்போக்கில் பாவாடையாக மாறி, சொல்-ஆராய்ச்சியில் சில ஐயங்களை உண்டாக்கி ஒரு கட்டுரை எழுதவும் காரணமாகிவிட்டது.

1. S.I.I. Vol. XII. No. 149.

2.

S.I.I. Vol. XII. No. 154.

3.

S.I.I. Vol. XII. No. 172.

4.

S.I.I. Vol. XII. No. 171.

அடிக் குறிப்புகள்