<@ செந்தமிழ்_வள்ளல்-தேக்காதி முெதன் கிடைத்தாலும், மதுரையில் நாயக்க மன்னர்களது ஆட்சி) முறை வலுப்பெற்ற கி.பி.17 ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதல் சேது மன்னர்களைப்பற்றிய செய்திகள் தொடர்ச்சியாக நமக்கு கிடைக்கின்றன. இந்த மன்னர்களது தலைநகராக திரு மெய்யமும், விரையாத கண்டனும் கி.பி. பதினாறாம் நூற்றாண்டின் இறுதிவரை அமைந்திருந்தன. பின்னர் கி.பி.1604-ல் ஆட்சியைத்தொடக்கிய முதலாவது சடைக்கன் சேதுபதி காலத்திலிருந்து இராமநாதபுரத்திற்கு மேற்கே எட்டுக்கல் தொலைவிலுள்ள புகழுர் (போகலுர்) என்ற ஊர் தலைநகராக இருந்து வந்தது. இங்கே ஆட்சி புரிந்த சேதுபதி மன்னர்களில் சிறப்பாக விளங்கியவர்கள் கூத்தன் சேதுபதி (1622-1630) இரண்டாவது சடைக்கன் என்ற தளவாய் சேதுபதி (1630-1645) திருமலை ரெகுநாதசேதுபதி (1645-1674) ஆவர். இவர்களது காலத்தில் சேது நாடு என்ற மறவர் சீமை (இன்றைய இராமநாதபுரம் மாவட்டம்) பல துறைகளிலும் மிகவும் பின்னைடவு பெற்றிருந்தது. இந்த மன்னர்கள் அவர்களது ஆட்சிக் காலங்களில் குடிமக்களுக்கு இன்றியமையாத கண்மாய் க ைஎ7 யு மர், கால்களையு மர், ஏந்தல்க ைஎ7 யு மர் நிர்மாணிப்பதில் ஈடுபட்டு இருந்தனர். அதையடுத்து1639 - 40ல் மதுரை மன்னரான திருமலை நாயக்கரது பெரும் படையெடுப்பினால் ஏற்பட்ட பேரழிவுகளைச் சந்தித்து இயல்புநிலையை ஏற்படுத்துவதில் இந்த மன்னர்களது காலம் முடிந்து விட்டது. ஆதலால் மறவர் சீமையில் போக்குவரத்து வசதிகள், மருத்துவ வசதிகள், கல்வி வசதிகள் போன்றவை மிகமிகக் குறைவாகத்தானிருந்தன. இத்தகைய இடர்பாடான சூழ்நிலையில் சேதுபதி மன்னர்களும் தங்களுக்கென விசாலமான மாளிகைகள் மற்றும் ஆடம்பர அமைப்புகள் எதனையும் மேற்கொள்ள இயலாத நிலையில் மிகவும் சாதாரணமாக போகலூர் கிராமத்தில் வாழந்து வந்தனர். இந்த சூழ்நிலையில்தான் கிழக்கரை வணிகரான செய்கு அப்துல்காதசமரைக்காயர் அவர்கள் அப்பொழுது சேதுபதியாக)
பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/49
Appearance