உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

காபாலி:

பைத்திய:

காபாலி:

பிக்குவும் பாசுபதனும்:

காபாலி:

பைத்திய:

காபாலி:

பைத்திய:

காபாலி:

பைத்திய:

பௌ. பிக்கு:

பைத்திய:

பௌ. பிக்கு: பைத்திய:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -19

சிவபெருமான் திருவருளால் நான் மீண்டும் காபாலி ஆ னேன். (மண்டையோட்டை எடுத்துக் கொள் கிறான்.)

தேவடியாள் மகனே, விஷத்தைக் குடியேன். (மண்டையோட்டைப் பிடுங்கிக் கொண்டு போகிறான்) (அவனைத் தொடர்ந்து சென்று) இந்த யமதூதன் என்னுடைய உயிரைக் கொண்டு போகிறான். ஐயா, எனக்கு உதவி செய்யுங்கள்.

அப்படியே உதவி செய்கிறோம். (எல்லோரும் பைத்தியக்காரனை மறித்துக் கொள்ளுகிறார்கள்) ஏ! நில்லு, நில்லு.

என்னை ஏன் வழி மறிக்கிறாங்கோ.

என்னுடைய கபால பாத்திரத்தைக் கொடுத்து விட்டுப் போ.

முட்டாள்! இது தங்கப் பாத்திரம் இன்னு தெரியலையா, உனக்கு?

இது தங்கப் பாத்திரம் என்றால், இதை யார் செய்தார்கள்?

அதைச் சொல்லட்டுமா? பொன் நிறமான போர்வையைப் போர்த்துக்கிட்டு இருக்கானே, அந்தத் தட்டான்; அவன் தான் இதைச் செய்தான். இது பொன் கிண்ணம்.

என்ன சொல்லுகிறாய்!

து பொன் கிண்ணம்; தங்கக் கிண்ணம். இவன் என்ன, பைத்தியக்காரனா?

அடிக்கடி பைத்தியக்காரன், பைத்தியக்காரன் இன்னு சொல்லுறாங்கோ. இதைப் பிடிச்சுக்கோ! அந்தப் பைத்தியக்காரனை எனக்குக் காட்டு. (காபாலிகனிடம் மண்டையோட்டைக் கொடுக்கிறான்.)