உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

குண்டான இருப்பிடத்தை என அறிக. போகம் என்றது இவனுக்குப் (உயிர்க்குப்) புசிப்பாயுள்ள சத்தாதி விடயங்களை என அறிக”2

மேலும் இதனைக் கீழ்கண்டவாறு விளக்கிக் கூறுகிறார்:

“மேலழுக்கான புடவைக்கு (அழுக்குத் துணிக்கு) அவ்வழுக்கு நீக்கவேண்டிச் சாணகம், உவர் முதலிய பிசைந்து மீளக் கழுவுமளவில் அவ்வழுக்கு கூடப்போவது போல, தனு, கரண, புவன, போகமாக மாயையை விரித்து, ஆன்மவகையை இதற்குள்ளாக்கி, பின் ணவம், மாயை, கன்மமெல்லாம் சேர நீங்கிப் பரஞானத்தைத் தரிசித்திருக்கவும் வைக்கும் அந்தச் சிவம்.’3

உயிரினிடத்தில் அறிவு, இச்சை, தொழில்கள் ஏற்படுவதற்காக மாயையிலிருந்து உடல், கரணங்கள், வாழும் இடம் முதலியவற்றை உண்டாக்கிக் கொடுப்பதுதான் படைத்தல் என்பது

2. காத்தல் (திதி)

ஆன்மா செய்த வினைப்பயன்களைத் துய்க்கும் பொருட்டுக் கடவுளால் உண்டாக்கிக் கொடுக்கப்பட்ட உடல், புலன், உலகம், போகப் பொருள்கள் (தனு, கரணம், புவனம், போகங்கள்) ஆகியவற்றை ஆன்மா புசிக்க வேண்டிய காலம்வரையில் நிலைநிறுத்தி வைப்பது தான் காத்தல் என்பது.

நல்வினை, தீவினை என்னும் இருவினைப் போகங்களை உயிர்களுக்கு உண்பிப்பது காத்தல் செயலாகும்.

3. அழித்தல் (சங்காரம்

உயிர்கள் வினைப்பயன்களைத் துய்த்தான பிறகு அவற்றிற்குக் கொடுக்கப்பட்ட உடம்பு, புலன், உலகம், போகப் பொருள்கள் கியவற்றை அழித்துவிடுதல் சங்காரம் எனப்படும்.

(உயிர்கள் தாம் செய்த வினைப்பயன்களை அனுபவிக்கும் போது வேறு புதிய வினைகளைச் செய்கின்றன. புதிய கருமங்களை அனுபவிப்பதற்காக மீண்டும் புதிதாக உடம்பு, புலன், உலகம், போகப் பொருள்கள் உண்டாக்கிக் கொடுக்கப்படுகின்றன. இவ்வினைப் பயன்களைத் துய்க்கும் போது உயிர்கள் மீண்டும் புதிய வினைகளைச் செய்கின்றன. இப்புதிய வினைகளுக்குத் தக்கபடி மறுபடியும் வேறு தனு, கரண, புவன், போகங்கள் கடவுளால் உண்டாக்கிக் கொடுக்கப்படுகின்றன.