உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

66

தோற்றம் துடியதனில்; தோயும்திதி அமைப்பில்; சாற்றிடும் அங்கியிலே சங்காரம்:- ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோதம்;முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு

131

என்று தமது உண்மை விளக்கம் என்னும் நூலில் கூறுகிறார்.

நடராசத் திருவுருவத்தின் ஐஞ்செயல் தத்துவக் கருத்தை இன்னும் தெளிவாகக் கூறுகிறார், செந்தமிழ்ப் புலமை நிறையப்பெற்ற செந்நாப் புலவர் குமரகுருபர சுவாமிகள். அடிகள் தமக்கு இயற்கை யாயமைந்துள்ள அழகும் தெளிவும் நிறைந்த நடையில் இது பற்றிக் கூறுகிற செய்யுள் இது:

66

பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்

நாமநீர் வரைப்பில் நானில வளாகமும் ஏனைப் புவனமும் எண்ணீங் குயிரும் தானே வகுத்ததுன் தமருகக் கரமே.

தனித்தனி வகுத்த சரா சரப்பகுதி

அனைத்தையுங் காப்பதுஉன் அமைத்த பொற்கரமே.

தோன்றுபு நின்றவத் தொல்லுல கடங்கலும் மாற்றுவது ஆரழல் வைத்ததோர் கரமே.

ஈட்டிய வினைப்பயன் எவற்றையும் மறைந்து நின்று ஊட்டுவ தாகும்நின் ஊன்றிய பதமே.

அடுத்த இன்னுயிர்கட்கு அளவில் பேரின்பம் கொடுப்பது, முதல்வநின் குஞ்சித பதமே.2

ச்செய்யுளின் கருத்து: கூத்தப்பெருமானுடைய துடி ஏந்திய கை ஆக்கல் செயலையும், அபயக்கை காத்தல் செயலையும், தீச்சுடர் ஏந்திய கை அழித்தல் செயலையும், ஊன்றிய திருவடி மறைத்தல் செயலையும், தூக்கிய திருவடி அருளல் செயலையும் குறிக்கின்றன என்பது.

காலடியில்

உருவம்

மிதிக்கப்பட்டிருக்கும் முயலகன் உரு மலத்துடன் (பாசத்துடன்) கட்டுண்டிருக்கிற ஆன்மாவைக் குறிக்கிறது.