உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ணைப்பு - 4

முத்துத் தாண்டவர் இசைப்பா

ஆடினதெப்படியோ!

இராகம் : கல்யாணி

தாளம் : ஆதி

பல்லவி

ஆடின தெப்படியோ நடனம் நீர்

ஆடின தெப்படியோ

அநுபல்லவி

தேடிய மெய்ப் பொருளே வளமேவுஞ்

சிதம்பரத் தேயொரு சேவடி தூக்கிநின்(று)

சரணம்

ஒன்றல்ல இரண்டல்ல ஒன்றிரண்டு மல்ல

(ஆடின)

நன்றல்ல தீதல்ல நாதவிந்து மல்ல

அன்றல்ல இன்றல்ல ஆதியந்த மல்ல

மன்றுள் மரகத வல்லிகொண் டாட

(ஆடின)

ஆணல்ல பெண்ணல்ல அன்றி அலியுமல்ல

காணும் உருவம் அல்ல காணா அருவுமல்ல

சேண் அல்ல வேயொரு தேவர்க்குள் ளேதேவ

வாணுதற் பச்சை மடந்தைகொண் டாட

(ஆடின)

பூதங்கள் அல்ல புறம்பல்ல உள்ளல்ல வேதங்க ளாலே விளங்கும் பொருளல்ல ஆதவன் போலே அசையும் வடிவல்ல மாதுமை யாள்பச்சை வல்லிகொண் டாட

(ஆடின)