உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

/ 85

பரத்துள சுகத்தை வரித்தசித் திரமாய்,

ஜீவ:

வா:

ஜீவ:

வா:

ஜீவ:

வா:

ஜீவ:

இல்லற மென்பதன் நல்லுயி ரேயாய்,

100 நின்ற காதலின் நிலைமை, நினையில், இரும்பும் காந்தமும் பொருந்துந் தன்மைபோல் இருவர் சிந்தையும் இயல்பா யுருகி

ஒன்றாந் தன்மை யன்றி, ஒருவரால் ஆக்கப் படும்பொரு ளாமோ?

105 வீக்கிய கழற்கால் வேந்தர் வேந்தே!

ஆமோ அன்றோ யாமஃ தறியேம். பிஞ்சிற் பழுத்த பேச்சொழி, மிஞ்சலை. மங்கைய ரென்றுஞ் சுதந்தர பங்கர். பேதையர். எளிதிற் பிறழ்ந்திடு முளத்தர். 110 முதியவுன் தந்தை மதியிலுன் மதியோ பெரிது? மற் றவர் தமில் உன்னயம் பேண உரியவர் யாவர்? ஓதிய படியே

பலதே வனுக்கே உடன்படல் கடமை.

இலையெனில்?

கன்னியா யிருப்பாய் என்றும்,

115 சம்மதம்.

கிணற்றிலோர் மதிகொடு சாடில்

எம்மதி கொண்டுநீ யெழுவாய்? பேதாய்! கன்னியா யிருக்கில் உன்னழ கென்னாம்? அரைக்கி லன்றோ சந்தனங் கமழும்?

விரைதரு மோசிறு கறையான் அரிக்கில்?

120 நானே பிடித்த முயற்கு மூன்றுகால் ஆனால் எங்ஙனம்?

8

பரம் - மறுமை, மறுவுலக வாழ்க்கை. வீக்கிய - கட்டிய. கழற்கால் வீரக்கழலை யணிந்த கால். மிஞ்சலை - மீறாதே. சுதந்தர பங்கம் - சுதந்தரம் இல்லாமல். பங்கம் - குறைவு. சாடில் - விழுந்தால். விரை - மணம்; வாசனை. கறையான் - சிதல்.