உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

'பாருங்கள் அமைச்சருடைய இராஜபக்தியை. இராமனுக்குப் பரதன் போலவும், முருகனுக்கு வீரபாகு தேவர் போலவும் அரசர் பெருமானிடம் சுவாமி பக்தியுள்ளவர் குடிலர்' என்று மற்றொரு பிரபு அபிப்பிராயங் கூறினார். நாராயணன் வெளியே போய், தனது மூக்கில் கரி பூசிக்கொண்டு உள்ளே வருகிறான். அவனது மூக்கைக் கண்டு அரசன் நகைத்து, ‘என்ன நாரண, உனது மூக்குக் கரியாயிருக்கிறது' என்று கேட்டான். ‘புறங் குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி, மூக்கிற் கரியாருடைத்து' என்னும் திருக்குறளை நினைவுறுத்துவதற்காக இப்படிச் செய்துகொண்டேன்' என்று விடைகூறுகிறான் நாராயணன். இதைக் கேட்டு எல்லோரும் நகைக்கிறார்கள். பிறகு பிரபுக்கள் அரசனிடம் விடைபெற்றுச் செல்கிறார்கள்.

அரசன், நாராயணனைப் பார்த்து, 'உனக்கென்ன பைத்தியமா? ஆமாம். நடேசனுடைய தோழன்தானே. அவனைப்போல நீயும் பைத்தியக் காரன்தான்' என்று கூற, நாராயணன், 'எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான், வேறாகும் மாந்தர் பலர்' என்று திருக்குற ளினால் விடையளிக்கிறான். ‘திருக்குறள் எதற்கும் இடம் அளிக்கும். அதை விடு' என்று கூறி அரசன் சேவகனுடன் செல்கிறான்.

நாராயணன் தனியே இருந்து தனக்குள்ளே சிந்திக்கிறான். 'வெள்ளை யுள்ளம் படைத்த அரசன் குடிலனை முழுதும் நம்பியிருக்கிறான். குடிலனோ சூது வாது அறிந்த சுயநலக்காரன். இவனை எல்லோரும் நல்லவன் என்றே நம்புகிறார்கள். இவனுடைய கள்ள உள்ளத்தை அறிந்தவர்களும் இவன் கள்ளத்தனத்தை வெளியில் சொல்ல அஞ்சு கிறார்கள். அரசாட்சி, நெருப்பு ஆறும் மயிர்ப் பாலமும் போன்றது. அரசர் பெருமான் விழிப்பாக இருந்தால் பிழைப்பார்; இல்லையேல் படவேண்டியதைப் பட்டே தீரவேண்டும். அரசருக்கு உதவி செய்து அரச காரியங்களைச் செம்மையாகவும், முறையாகவும், நேர்மை யாகவும் செலுத்தவேண்டுவது அமைச்சர் கடமை. அதை விட்டு இந்த அமைச்சன் அரசனைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றக் கள்ளத் தனமாகச் சூழ்ச்சிகளைச் செய்கிறான். அந்தோ ! இவனுடைய சூது வாதுகளை வெளிப்படுத்துவது எப்படி? வெளிப்படையான சான்று களைக் காட்டினால்தானே நம்புவார்கள்? சூழ்ச்சிக்காரர்கள் சான்றுகள் தெரியும்படியா காரியம் செய்கிறார்கள்? அரசன் குடிலனுடன் ஏதோ மந்திராலோசனை செய்ததாகக் கூறினான். நடேசன் பெயரையும் குறிப்பிட்டார். அரசருக்கு ஏதோ ஆபத்து வரும்போல் தோன்றுகிறது. இவ்வாறு தமக்குள் நாராயணன் எண்ணிக் கொண்டே போகிறான்.