உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

நட:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

(2-வது உழவனை நோக்கி)

145 சாத்தன் உன்னுடன் சண்டை யிட்டது.

(நடராஜனை நோக்கி)

சாத்திரி தரையி லிருக்கிறார்; அவரது மாமனார் கிட்டவே ஆமைப் பலகையில் (நாற்புறமும் நோக்கி, செவியில்)

...

இருந்து பலபல இரகசியம் இயம்புவர் திருந்தச் செப்பாய்; யாருளர் இவ்வயின்?

2-வது உழ: 150 இந்த மாமனார் மந்திரி மனைவிக்கு

முதல் உழ:

உற்ற ஜோசியர்.

பொறு! யான் உரைப்பன்.

மற்றவ் வெல்லையென் மைத்துனன் ஒதுங்கி அருகே நின்றனன். அப்போ தறைவர் :

"மருகா! நேற்று மந்திரி மனைவி

155 பலபல பேச்சுப் பகருங் காலை, பலதே வன்றன் ஜாதக பலத்தில் அரச யோகம் உண்டென் றறைந்தது விரைவில் வருமோ என்று வினவினள். வரும்வரும் விரைவில் என்றேன் யானும். 160 மறுமொழி கூறாது இருந்துபின் மனோன்மணி வதுவைக் காரியம் பேசினள். மற்றுஅது நடக்குமோ? என்றவள் கேட்டு நகைத்தாள். நடப்ப தரிதென நான்மொழிந் ததற்கு

99

வருத்தமுற் றவள்போல் தோற்றினும், கருத்திற் 165 சிரித்தனள் என்பது முகத்தில் தெரிந்தேன். எனப்பல இரகசியம் இயம்பி, “வலியோர்

ஆமைப் பலகை ஆமையின் வடிவமாக அமைந்த மணை. அவ் வெல்லை – அப்பொழுது. அறைவர் - சொல்லுவார். இயம்பி - சொல்லி. வலியோர் - பெரியோர். இது மலையாள நாட்டு வழக்குச் சொல். 166 முதல் 168 அடிகள்: பெரிய மனிதரின் முகக் குறி, மனக் குறிகள், அவர்கள் சொல்லாமலே அவர்கள் எண்ணியதைத் தெரிவிக்கும் என்னும் கருத்துள்ளன.