உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

205 ஏதோ ஊழ்வினை இசைவால் தனது காதாற் கேட்கவும் கண்ணாற் காணவும் இல்லா ஒருவனை எண்ணி மயங்கினள். அல்லல் இதுவே போதும், அஃதுடன்

அப்புரு டன்றான் ஆரென ஆயில் 210 ஒப்புறு புருடோத் தமனே என்ன

எப்படி நோக்கினும் இசையும். அப் படியே செப்பினர் யாவும் தெரிந்தநம் குருவும். ஏதோ ஒருவன் சூதா ஏவிய

தூதால் வந்ததே ஈதோ பெரும்போர்! 215 போர்புரிந் திடவரு புருடோத் தமனும் வார்குழல் மனோன்மணி மாதும், நோக்கில் நம்மிலும் எத்தனை நம்பிய அன்பர்!

இம்மென ஒருமொழி இசைத்திவர் தம்மை ஒருவரை ஒருவர் உணர்த்திடப் பண்ணில், 220 வெருவிய போரும் விளைதுயர் அனைத்தும் இருவர்தம் துக்கமும் எல்லாம் ஏகும். இப்படிச் சுலபசாத் தியமா யிருக்க

அப்படி ஒன்றும் அடிகளெண் ணாமல் சுருங்கைதொட் டிடவே துவக்கித் தன்திரு 225 அருங்கை வருந்தவும் ஆற்றுமப் பணியே. சுருங்கை இதற்குஞ் சொல்லிய துயர்க்கும் நெருங்கிய பந்தம் நினைத்தற் கென்னை? ஒன்றும் தோற்றுவ தன்றுஎன் தனக்கே, என்றுநான் எண்ணி எம்குரு நாதன்

அடிகள் சுந்தரமுனிவர். சுருங்கை கரந்துபடை. ஒருத்தரும் அறியாதபடி மறைத்து அமைக்கப்பட்ட வழி. நீர் போவதற்கு அமைக்கப்பட்டு, அது தெரியாதபடி மேலே மூடப்பட்ட கால்வாய்க்கும் பெயர். சுருங்கை என்பது கிரேக்க மொழி. கி. மு. முதல் நூற்றாண் டிலும் கி. பி. 1, 2 நூற்றாண்டுகளிலும் கிரேக்கராகிய யவனர் தமிழ் நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்த காலத்தில், அவர் மூலமாகத் தமிழ்மொழியில் கலந்த கிரேக்கச் சொற்களில் இதுவும் ஒன்று. இச்சொல் சங்க காலத்து நூல்களிலும் பிற்காலத்து. நூல்களிலும் காணப்படுகின்றது. தொட்டிட - தோண்ட. (தொடு தோண்டு.)

-