உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

நட:

சுந்தர:

கருணா:

சுந்தர:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

எத்தனை கருணை? என்னைகைம் மாறு? நல்லது! நல்லது! சொல்லிய முகமன்! 260 வேலை எனதோ? உமதோ? விநோதம்! ஏவிய வழியான் போவதே அல்லால் ஆவதென் என்னால்? ஆ! ஆ! நன்றே!

கருணா கரரே! களைப்பற நீரிங்கு

ஒருவா றுறங்கவென் றுன்னி அன்றோ 265 இவ்விடம் அனுப்பினோம்? என்னை சிறிதும் செவ்விதில் தூங்கா திருந்தீர்! சீச்சீ! எத்தனை நாளா யினநீர் தூங்கி! இத்தனை வருந்தியும் ஏனிலை தூக்கம்? பன்னாள் இரவும் பகலும் உழைத்தீர். 270 எந்நா ளாறுவீர் இவ்வலுப் பினிமேல்?

அடியேற் கலுப்பென்? அருளால் அனைத்தும் முடிவது. மேலும், யான்வரும் வேளை இட்டமாம் நிட்டா பரரும் தனியாய்

நிட்டைவிட் டெழுந்தார். இருவரும் அதனால் 275 ஏதோ சிலமொழி ஓதிமற் றிருந்தோம். ஈதோ உதயமும் ஆனதே; இனியென்?

விடிந்த தன்றிது; வெள்ளியின் உதயம் படும், படும்; மிகவும் பட்டீர் வருத்தம். உங்கள்பேச் சறிவோம்; ஓயாப் பேச்சே! 280 இங்கது முடியுமோ? ஏனுங் கட்கும் சமயிகட் காம்சச் சரவு?

அமையும் உங்கட் கவரவர் நிலையே. (யாவரும் போக)

3

முகமன் - முன்நின்று பாராட்டுவது. உதயம் - உறப்பாடு. சமயிகள்

பல மதத்தார்கள்.