சொற்பொருள் வரிசை
13
பள்ளி என்னுஞ் சொற்குத் தோன்றியுள்ளன. இந்நுண் பொருட் பாகுபாட்டுப் பட்டி வருமாறு:
1.
பள்ளம் அல்லது தாழ்வு:
தாழ்வான வீடுகள் அமைந்த சிற்றூர் அல்லது முல்லைநிலத்தூர்,
முல்லை நிலத்தூர் போன்ற இடைச் சேரி, ஆழிடம்.
2. பள்ளமான வயலில் வேலை செய்யுங்குலத்தார்:
பள்ளத்தி, வன்னியன், வன்னியகுலச் சிற்றரசரான குறும்பர்.
3. படுக்கை:
மக்கட் படுக்கை, விலங்கு துயிலிடம், தூக்கம்.
4. மனை (வீடு)
வீடு, அறை, அரண்மனை, வேலைக்களம், அறச் சாலை, முனிவர் தவநிலையம், சாலை.
5. கோயில்
கோயில் (பொது), சைன பவுத்தக் கோயில், கிறித்தவக் கோயில், முகமதியர் கோயில் (பள்ளி வாசல்) கல்லறை. கோயில் என்பது அரசன் மனை போன்ற தேவமனை என்றுமாம்.
6. கல்விச் சாலை
7. ஊர்
8.
நகரம், பள்ளி என்பது ஒரு கோயில் அல்லது அரண்மனை யிருப்பது பற்றியும் ஒரு நகரைக் குறிக்கும்.
இடம்
இச் சொற் பொருள் வரிசை ஏரணமுறை தழுவியதாகும். இதில் இறுதியில் வந்துள்ளபொருள், சென்னைப் பல்கலைக் கழக அகராதியில் முதலிடம் பெற்றிருத்தல் காண்க, இங்ஙனம் தலை கீழாக மாறியது, மொழி வளர்ச்சிக் காலத்து இலக்கியம் முற்றும், மறைந்தபின் இடைக்காலத்து இலக்கியத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டு, வரலாற்றுமுறை தழுவமுயன்றதன் பயனே.
இனி, இப் பள்ளி யென்னுஞ் சொற்பொருள் வரிசையை வழுப்பட அமைத்ததோடமையாது, இச் சொல்லை வடசொல்லென்றுங் கூற துணிந்துளது சென்னைப் பல்கலைக்கழக சொற்களஞ்சியம். இச்சொல் தென்சொல் என்பதை, பள்ளம் அல்லது தாழ்வு என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்டு, இதனொடு தொடர்புற்ற ஏனைச் சொற்களைக் கண்டு தெளிக. அவையாவன: