உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

அப்பாத்துரையம் - 41

அறஞ்செய்வதாலும் துன்பத்தை ஒழித்துவிட முடியாது. கொல்லாமையே சிறந்த பண்பாக அமைய வேண்டும்.

கௌதம புத்தர்.

49. முரண்பாடு

என் கருத்தில் முரண்பாடா?-

சரி, அப்படியானால் நான் முரண்பட்ட கருத்துக்கள் உடையவன் தான்! என் நெஞ்சம் பெரிது; திரளான முரண்பாடு களுடைய மனித வகுப்பே அதில் அடங்கியுள்ளது.

புரட்சிக் கவிஞர் வால்ட் விட்மன்.

உலகமுள்ளளவும் விதைப்புக் காலமும் இருந்தே தீரும்; அறுவடைக் காலமும் இருந்தே தீரும். தட்பும், வெப்பும், வேனிலும் கூதிரும், பகலும், இரவும் என்றும் முடிவடைய மாட்டா.

விவிலிய நூல், உலகத் தோற்றப்பகுதி.

ஆ! என் தீராப் பகைவர்கள் பற்றி நான் விரும்புவதெல்லாம் அவர்கள் ஒரு நூலாசிரியர் ஆகவேண்டும் என்பதே!

விவிலியநூல், பழைய ஏற்பாடு, யோபுவின் ஏடு.

ஒரு நூல் பற்றிக் கருத்துரை எழுத நேரும்போது, கருத்து ரைக்கு முன்பு அந்நூலை நான் வாசிக்கத் துணிவதேயில்லை. கருத்துரைக்கு அதனினும் தப்பெண்ணம் உண்டாக்குவது வேறு எதுவும் இல்லை.

(பத்திரிகை ஆசிரியர், கருத்துரையாளர்) ஸிட்னி ஸ்மித்.

நூலை வாசிக்காவிட்டால் என்ன, அதில் ஒரு சொல்லைக் கூட உணராவிட்டால் என்ன; நூலைப்போல அழகு செய்யும் பொருள் வேறு எதுவும் கிடையாது.

ஸிட்னி ஸ்மித்.

சிந்திக்கும் பழக்கத்தை அகற்றுவதற்கு நூலை வாசிப்ப

தென்பது அடிக்கடி ஒரு திறமிக்க சூழ்ச்சியாயமைகிறது.

ஆர்தர் ஹெல்ப்.