உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் / 21

இவற்றை எல்லாம் மறைந்து இருந்து பார்த்திருந்த அரசரின் சேவர்கள் விரைந்து சென்று பிம்பிசார அரசனுக்குக் கூறினார்கள். அரசரும் உடனே புறப்பட்டுச் சித்தார்த்தர் இருந்த பண்டவமலைக் கு வந்தார். வந்து, இவருடைய உடல் பொலிவையும், முகத்தின் அமைதி யையும் அறிவையும் கண்டு, இவர் அரசகுமாரன் என்பதை அறிந்து கொண்டார். பிறகு இவ்வாறு கூறினார்:

66

“தாங்கள் யார்? ஏன் தங்களுக்கு இந்தத் துறவு வாழ்க்கை? உயர் குலத்திலே பிறந்த தாங்கள் ஏன் வீடுகள் தோறும் பிச்சை ஏற்று உண்ணவேண்டும்? இந்தத் துன்ப வாழ்க்கையை விடுங்கள். என் நாட்டிலே ஒரு பகுதியைத் தங்களுக்கு அளிக்கிறேன். தாங்கள் சுகமே இருந்து அரசாட்சி செய்து கொண்டிருக்கலாம்."

இதைக் கேட்ட சித்தார்த்தர் கூறுகிறார்: "மன்னரே! அரசர் மரபிலே, உயர்ந்த குலத்திலே பிறந்தவன்தான் நான். துய்ப்பதற்காக நிறைந்த செல்வமும் வேண்டிய பல இன்பங்களும் ஆட்சி செய்யக் கபிலவஸ்து நகரமும் எனக்கு இருக்கின்றன. என் தந்தை சுத்தோதன அரசர், நான் அரண்மனையில் இருந்து அரச போகங்களைத் துய்க்க வேண்டு மென்றுதான் விரும்புகிறார். ஆனால், அரசரே! இன்ப நலங்களை நுகர்ந்துகொண்டு ஐம்புலன்களைத் திருப்திப்படுத்திக் கொண்டு காலம் கழிக்க என் மனம் விரும்பவில்லை. உயர்ந்த அறிவை, பூரண மெய்ஞ் ஞானத்தை அடைவதற்காக இல்லற இன்ப வாழ்க்கையைத் துறந்து வந்தேன். ஆகவே, தாங்கள் அளிப்பதாகக் கூறும் அரச நிலையும் இன்ப வாழ்க்கையும் எனக்கு வேண்டா.

பிம்பிசார அரசர், அரச நிலையையும் இன்ப வாழ்க்கை யையும் ஏற்றுக் கொள்ளும்படி மீண்டும் மீண்டும் வற்புறுத்தி அழைத்தார். சித்தார்த்தர் அதனை மீண்டும் மீண்டும் உறுதியோடு மறுத்தார்.

சித்தார்த்தருடைய துறவி உள்ளத்தைக் கண்ட பிம்பிசார அரசர் வியப்படைந்தார்; இவரது மன உறுதியைக் கண்டு தமக்குள் மெச்சினார்.

66

"தாங்கள் புத்த நிலையை அடையப்போவது உறுதி. புத்த பதவியையடைந்த பிறகு தாங்கள் முதன்முதலாக அடியேன் நாட்டிற்கு எழுந்தருள வேண்டும்," என்று அரசர் கேட்டுக் கொண்டார். அரசர் பேசும் போது அவரையறியாமலே அவருடைய தலை வணங்கின்று; கைகள் கூப்பின.